மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா?
மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா?
”மனைவி துன்புறுத்துவதை காரணம் காட்டி விவாகரத்து பெறுவதற்கு கணவனுக்கு
உரிமை உள்ளது” என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து ள்ளது.
முன்னாள் M.L.A. சண்முகத்தின் மகள் ஹேம லதாவுக்கும், கே. ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருமணம் நடந்தது. வேளச்சேரியில் வசித்து வந்த இருவரு க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷ், அவரது குடும்பத்தினர்மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார் ஹேமலதா.
இதையடுத்து ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 22நாட்கள் சிறைவாழ்க்கையை முடித்து விட்டு வெளியே வந்தார் ரமேஷ். இதைத் தொடர்ந்து விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரமேஷ். அதில், ”தங்கள் திருமண த்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இம்மனுவிற்கு பதிலளித்த ஹேமலதா ”கணவருடன் சேர்ந்து வாழும் உரிமையை மீட்டுத்தரும்படி உத்தர விடவேண்டும்” என்றுகூறியிருந்தார்.
இம்மனுவை கடந்த 2008ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதி, ரமேஷின் மனுவை தள்ளுபடிசெய்தும், ஹேமலதாவின் மனுவை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஏற்கனவே ஹேமலதா தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கில் இருந்து கணவர் ரமேஷ், அவர் குடும்ப த்தினரை விடுதலை செய்து மகளிர் நீதிமன்றம்.
இதையடுத்து, திருமணத்தை செல்லாது என்றறிவிக்க மறுத்து குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ரமேஷ்.
அதில் ”ஹேமலதா பிடிவாதகுணம் கொண்டவர். தான் நினைப்பதை செய்து முடிக்கும் குணம் அவரிடம் உள்ள து. அவரது இந்த குணத்தால் என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. எனது குடும்பத்தாரை விட்டு பிரியவேண்டும் என்றும், தனியாக வாழ வே ண்டும் என்றும் என்னை வற்புறுத்தினார். இல்லாவிட்டால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். `நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?’ என் றெல்லாம் திட்டினார். இறுதியில் என் மீது போலீசில் பொய்ப்புகார் கொடு த்து விட்டார். எனவே இனி மேலும் ஹேமலதாவுடன் சேர்ந்து வாழ்வதற் கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எனவே எங்கள் திருமணத்தை செல் லாது என்று அறிவித்துவிட்டு, குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவிற்கு ஹேமலதா அளித்த பதில் மனுவி ல், என்னை ரமேஷ் அடித்து துன்புறுத்தினார். இதற் காக 2முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறேன். அவரை விட்டு நான் பிரிந்து செல்லவில்லை. அரசியல் செல்வாக்கை குடும்பத்தி ல் பயன்படுத்தினேன் என்று என்னைப்பற் றி அவர் சொல்வதில் உண்மை இல்லை” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணு கோபால் ஆகியோர் விசாரித்து பரபரப்பு தீர்ப்பளி த்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில், மனைவி கொ டுமை செய்ததாக கூறிய குற்றச்சாட்டை ரமேஷ் நிரூபிக்க வில்லை என்றுகூறி அவரது மனுவை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இ ந்த வழக்கில் எங்கள்முன்பு வைக்கப்படும் கேள்விகள் 2 தான். மனைவி கொடுமை செய்தார் என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து விவா கரத்துபெற கணவருக்கு உரிமைஉள்ளதா? அதே சூழ்நிலையில், மனைவி தனது கணவனுடன் இணைந்து வாழ்வதை ஏற்க முடியுமா? என்பவை தான்.
கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஹேமலதா கூறுகிறார். ஆனால் குடும்பநல நீதிமன்றத்தில் அவர் விவாகரத் து கேட்கவில்லை. தன்னை மனைவி கொடுமைப் படுத்துவதாகக் கூறி கணவன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான், கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமையைக் கேட்டு ஹேமலதா மனு தாக்கல் செய்திருக்கிறார். கணவ ன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசில் ஹேம லதா புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவர் ஜாமீன் பெறுவதையும் ஹேமலதா எதிர்த்து இருக்கிறார்.
மனைவியின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது, ரமேஷ்தான் மனைவியிடம் இருந்து கொடுமைகளை அனுப வி த்திருப்பது தெரிகிறது. கணவன் மீது கூறிய கிரிமினல் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை . இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு, கண வனுடன் சேர்ந்து வாழும் உரிமையை கேட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? அன்பெல் லாம் அகன்ற பிறகு, 2 பேரும் எப்படி சேர்ந்து வாழ முடியும்?
எனவே சேர்ந்துவாழும் உரிமையை இங்கு அவர் கோரமுடியாது. அது தொடர்பான ஹேமலதாவின் மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுதவறு. அதோடு மனைவியிட ம் இருந்து கொடுமைகளை அனுபவித்த கணவன் ரமேஷ், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு உரிமைஉள்ள து. இதனடிப்படையில் 2 பேரின் திருமண ம் செல்லாது என்று அறிவிக்கிறோம். இவர்கள் வழக்கில் குடும்பநல நீதிமன்ற ம் பிறப் பித்திருந்த உத்தரவை தயக்கமி ன்றி ரத்து செய்கிறோம். ரமேஷ் தனது மனைவிக்கு ஒரே ‘செட்டில் மெண் ட்’ ஆக இன்னும் ஒரு மாதத்துக்குள் ரூ.2.50 லட்சத்தை கொடுக்க வேண் டும் என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.
கணவன், மனைவியை சார்ந்து வாழ வேண்டும், மனைவி கணவரை சார்ந்துவாழவேண்டும்,அப்போது தான் குடும்ப வாழ்க்கை சிறக்கும். இல்லை யென் றால் கசக்கும். இதேபோல் தான் ஆகிவிட்டது ரமேஷ் – ஹேமலதா பிரிவு. இனியாவது கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்தால் மட்டுமே விவாகரத்துபோன்ற கொ டுமைகளைதவிர்க்கலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!