Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹிட்லர், ப‌யத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! – அரியதொரு தகவல்!

ஹிட்லர், ப‌யத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! – அரியதொரு தகவல்!

ஹிட்லர், ப‌யத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! – அரியதொரு தகவல்!

சர்வாதிகாரி என்றாலே அதில் ஹிட்லர், முசோலினி இல்லாமல் முழுமை பெறாது என்று

சொன்னால் அது மிகையாகாது.

இரண்டாம்உலகப்போரில் ஹிட்லரின் தோளோடு தோள் கொடுத்து உதவியதோழன் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி. போரில் தோற்றபிறகு ஒருவேனில் ஏறிஎல்லை யைகடந்து தப்பிக்க முசோலினி முயன்றார். கூடவே தனது இணை பிரியா காதலி கிளாரா பெட்டாசியையும் அழைத்துச் சென் றார்.

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றபோது அவர்களை புரட்சிப் படை தடுத்து நிறுத்தியது. முசோலினியை அடையாள ம் கண்டு கொண்டு காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினார்கள். “இவனை கைது செய்து நேச நாடுகளிடம் ஒப்படைத்து விடலாம்” என்று பலரும் கூறினார்கள். முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த முசோலினி அவர்கள் முன் மண்டியிட்டு, ” என்னை கொள் ளாதீர்கள்.” என்று கெஞ்சினார். எப்படிப்பட்ட சர்வாதிகாரிக்கும் உயிர் பயம் இருக்கும் போல… முசோலினியின் பேண்ட் சிறுநீரால் நனைந் திருந்தது.

எதிரேநின்றஇளைஞர்கள் முசோலினியையும், அவர் காதலியையும் சல்லடையாக துளைத் தெடுத்தார்கள். அவர்கள்உடலை மிலான் நகரின் நடுவீதியில் போட்டார் கள். ஒரு சாமானியப்பெண் முசோலினியின் முகத்தில் காரித் துப்பினாள். பிறகு நிறைய பெண்கள் வந்து துப்பினார்கள். இளைஞர்கள் சிலர் சுற்றிலும் நின்று முசோலினியின் உடல்மீது சிறுநீர் கழித்தா ர்கள். பின் ஒரு பெட்ரோல் பங்க் வாயிலில் தலை கீழாக தொங்கவிட்டு போய்விட்டார்கள். முசோலினி யின் கொடூரமான முடிவு ஹிட்லருக்கு தெரிய வந்தது. அப்போதே அவர் உடல் நடுங்கியது. “இந்த கொடூர முடிவு எனக்கு வரக் கூடாது. நான் இறந்தவுடன் என் உடலை எரித்து விடு ங்கள். என் சாம்பல் கூட எதிரிகள் கையில் கிடைத்து விடக்கூடாது. “சத்தியம் செய்து கொடுங்கள் என்று தன் உதவியாளர்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அப்போதே அவரது இறுதிநேரம் நெருங்கி இருந்தது. ஹிட்லர் ஏதாவது ஒரு அரபு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்கலாம். யூதர்களை கொன்றதால் அரபு நாடுகள் இவரை வரவேற்று இருக்கும். ஆனால், ஹிட்லருக்கு கடைசி வரை அந்த எண்ணம் இல்லை.

“எந்த விளைவுகளையும் சந்திக்கும் துணிவு ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டும். நான் வாழ்ந்த இடம் இது. இங்கிருந் தபடியே என் முடிவை சந்தித்துக்கப் போகிறேன். நாளை.. கோடிக்கணக்கான மக்கள் என்னை சபிக்கப்போகிரார்கள் என்பது எனக்குதெரியும். விதி அப்படியொருநிலையை எனக்கு தந்து விட் டது” என்று சொன்னார் ஹிட்லர். தனது காதலி ஈவாபிரானுடன் கைகோர்த்தவாறு மெல்ல உள்ளறைக்கு நடந்தார். இரு வரும் சோபாவில் அமர்ந்தனர்.

ஈவா முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் ஹிட்லர் தன் கைத் துப்பாக்கியை எடுத்து வலது நெற்றிப்பொட்டில் வைத்துசுட்டு தற்கொ லை செய்து கொண்டார். ஹிட்லர் விருப்பபடி அவர்களின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்ப ட்டது. உடலின்சாம்பலை சிறுகோணிப்பையில் சேகரித்து, மண்ணை ஆழமாக தோண்டிப் புதை த்தார்கள். சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்கவில்லை. ஹிட்லரின் விருப்பப்படிதான் அவரது மரண மும் நிகழ்ந்தது.

 
 
 

Leave a Reply