“இனி பாண்டவர் அணி என்ற பெயருடன் செயல்பட மாட்டோம்!” – நடிகர் விஷால் அதிரடி
“இனி பாண்டவர் அணி என்ற பெயருடன் செயல்பட மாட்டோம்!” – நடிகர் விஷால் அதிரடி
இனி பாண்டவர் அணி இல்லை; நடிகர் சங்கம் மட்டுமே: விஷால்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் சென்னையில் நடைபெற் றது. பின் செய்தியாளர்களை
சந்தித்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், இதை சந்தோஷமான நிகழ் வாக நினைக்கிறோம். நன்றி சொல்வதற்காகவே இந்த பத்திரிக் கையாளர் சந்திப்பு. அனைவருக்கும் நன்றி எங்களின் சங்க நிர்வாக பணிகளை துவங்குகிறோம். தேர்தலின் தெரிவிக்கப்பட் ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நிர்வாக பணி கள் சிறப்பாக நடைபெற அனை வரும் ஒத்துழைப்பு அளிக்க வே ண்டும். எல்லா உறுப்பினர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட உள்ளோம்.
இனி பாண்டவர் அணி என்றபெயருடன் செயல்படமாட்டோம். அது தேர்தலுக் காக உருவான அணி. இனி நடிகர் சங்க என்றே செயல்படுவோம். பாண்டவர் அணி என்ற பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகின்றதாக புகார் வந்துள்ளது. எந்த சங்கத்திற்கும் நாங்கள் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை. இனி எஸ்.பி.ஐ., சினிமாஸ் உடனான பேச்சுவார்த்தை, சங்க கட்டிடம் ஆகிய பிரச்னைகளை முதல் பணியாக எடுத்து செயல்பட உள்ளோம். தேர்தலின்போது எல்லா உறுப்பினர்களு ம், குறிப்பாக மூத்த உறுப்பினர்கள் பலரும் வந்துதிரளாக ஓட்டளித்
தது வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார். முன்ன தாக பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட அனைவரின் ஒத்துழைப்பு அவசிய ம் என்றார்.
இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளி ட்ட சங்கங்களைச் சேர் ந்த நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலு த்தினர்.
தினமலர் செய்தி