Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ நீங்க செய்ய வேண்டியவைகள்

காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ நீங்க செய்ய வேண்டியவைகள்

காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ நீங்க செய்ய வேண்டியவைகள்

உங்கள் காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ வேண்டும் என் றால் நீங்கள் சில விஷயங்களை

எப்படி இருக்கிறதோ, அதை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டியது அவ சியம். இல்லையேல், உங்கள் மகிழ்ச்சியில் விரிசல் ஏற்பட நிறைய வாய் ப்புகள் இருக்கின்றன.

காதல்வாழ்க்கை என்பது மனம்சார்ந்தது என்றாலும் , உடல் சார்ந்த விஷயங்களினால் ஏற்படும் விளைவு களை ஏற்று நடக்க தெரிந்திருக்க வேண்டும். மற்றும் சண்டைகள் வந்தாலும் அதன் பிறகு புரிதல் ஏற்பட வேண்டும், உங்கள் காதல் துணை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் சேர்த்து நீங்கள் விரும் வேண்டும். இவை எல்லாம் தான் ஒருவரது காதல் வாழ்க் கையை மகிழ்ச்சிகர மானதாக மாற்றுகிற து…

தவறுகள் செய்யாத மனிதர்கள் இவ்வுல கிலேயே இல்லை. நீங்கள் காதலிக்கும் நபரின் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள் ளவேண்டும். அவரை முழுமையாக ஏற்று காதலிக்கவேண்டும். ஓரு பக்கத்தை மட்டும் பார்த்து காதலிப்பது சரியான விளைவை தராது.

சிறு சிறு சண்டைகளுக்கெல்லாம் பிரிந்து செல்வதென்றால் இவ்வுலகில் திருமணமான அனைவரும் விவாகரத்து பெற் றிருக்க வேண்டும். எனவே சண்டையிடுங்கள், சண்டையிட்ட அடுத்த சிறிது நேரத்திலேயே புரிந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.  

குடும்பங்களும் இணைகின்றனஎப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் வெறும் இருவர் மட்டும் இணையப் போவதில்லை, இரு குடும்ப ங்கள் இணைகின்றன. எனவே, நீங்கள் காதலிக்கும் நபரை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் விரும்ப நீங்கள் தயாராக இருக்கவேண்டும். அந்த மூன் று நாட்கள்பெண்களின் அந்த மூன்று நாட்களை எந்த ஒரு நபர் புரிந்துகொள்கிறாரோ, அவரே சிறந்த துணையாக இருக்க முடியும்.

மாதாவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு, இரத்தப்போக்கே இல்லாமல் இருப்பது, நாட்கள் தள்ளிப்போவது என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இச்சமயத்தில் வலி யின் காரணமாக பெண்கள் வலுவிழந்து போகலாம். சிலருக்கு அதிக மான கோவம்வரும் இவற்றை எல்லாம்ஏற்று அவரை புரிந்துகொண்டு நடக்கவேண்டும். சந்தோஷம் வந்து செல்வது போலவே, துன்பமும் வந்துபோகும். எல்லா சூழல்களிலும் உங்கதுணை யை அரவணைத்து வாழ்க்கை யை வழிநடத்தி செல்ல வேண்டும். இதுவே உங்க ளுக்கு உண்மையான மகிழ்ச்சியை பரிசளிக்கும்.

இவ்வாறிருந்தால் உங்கள் காதல் வாழ்க்கையில் இன்றல்ல‍ என்றென்றும் விரிசல்கள் விழாமல் எப்போதும் மகிழ்ச்சியும் குதூகலமும் உங்களது குடும்பத்தில் குடி கொண் டிருக்கும்.

 
 

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: