சுண்டல்- இதனை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
சுண்டல்- இதனை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன் சத்து மிகவும் குறிப்பிடத் தக்கது. நிறைய உணவுகளில் இந்த
புரோட்டீன் சத்து காணப்பட்டாலும் குறிப்பாக அசைவ பிரியர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை போன்றவற் றில் அதிகம் இருக்கிறது. ஆனால் சைவ உணவாளர்களுக்கு பருப்பு வகைகளில் தான் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. அந் த பருப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் சுண்டல்-ஐ இங்கு பார்க்கவிருக்கிறோம்.
சுண்டல் என்பது கொண்டைக்கடலையில் ஒரு வகைதான்.. இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இதயம் ஆரோக்கிய மாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட் ரோட், வைட்ட மின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும். என்கிறது சித்த மருத்துவம்