உணர்வல்ல.. உணர்ச்சி!
இந்த (நவம்பர்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
இந்த தேசத்தில் நினைத்ததை உண்பதற்கு உரிமையில்லையா? எழுதுவ தற்கும் பேசுவதற்கும் சுதந்திரம் இல்லையா? என்ற
கேள்விகேட்டுபோராட்டம் நடத்துவதில்லை எந்தவொரு போராட்டத்திற்கும் இப்போதெ ல்லாம் மதச்சாயம் பூசுவதும், ஜாதியை வை த்து விளையாடுவதும் கட்சிகள் இவற்றில் குளிர் காய்வதும் வாடிக்கையாகி விட்டது.
இப்போதெல்லாம் ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறி ஞர்கள், நீதியரசர்கள் என எல்லோருமே தங்கள் சம்பந்தப்பட்டப் பிரச் சனைகளை தவிர்த்து… தார்மீக ஆதரவு என்ற பெயரில் தங்கள் பொறுப்பை மறந்து போராடு வது தேவைதானா?
எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிவியல் அறிஞர்களும் தங்களுக்கு தரப்பட்டவிருதுகளை த் திருப்பித் தருவதை இப்போது செய்திகளில் பார்க்கிறோம். இது அழகல்ல. எந்தவொரு எதிர் பார்ப்பில்லாமல் ஒருவரின் திறமையை மதித்து அரசு தருகிற அங்கீகா ரம் என்பது ஒட்டுமொத்த மக்களின் அங்கீகாரமாகும். இதை திருப்பித் தருவதென்பது மக்களையும் தேசத்தையும் அவமதிப்பதற்கு ஒப்பாகாதா?
விருது பெரும்போது இல்லாத சமூக அக்கறையும், கருத்துச் சுதந்திரம் பற் றிய சிந்தனையும் இனமான உணர்வும் திடீ ரென இப்போது மட்டும் இவர்களுக்கு வருவது உண்மையானஉணர்வா அல்லது இன்ஸ்டெ ண்ட் பீலிங் என்று சொல்லக் கூடிய அரிப் புணர்ச்சியா?
விருதுகளை திருப்பித் தராங்க•. ஆனா அதோ கொடுத்த பண முடிப்பையும் தங்கப் பதக்கங் களையும் திருப்பித் தருவாங்க ளா என்றும் விருது வாங்கினா கிடைக்கிற விளம்பரத்தைவிட விருதை திருப்பித் தரும்போது கிடைக்கிற விளம்பரம் அதிகம் போலிருக்கே. என்றெல்லாம் கட்செவியிலும் முக நூல்களிலும் வலைதளங்களிலும் விமர்சனங்கள்எழுகின்றன•
தனித்னியே விருதை திருப்பித் தருகிற இவர்களால் எல்லா கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் சிந் தனையாளர்களையும் ஒன்றிணைத்து ஒரே குரலாய் எதிர்ப்பை எழுத்து மூலமாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ தெரிவிக்க முடியாதா என்ன?
எழுத்தாளர்கள் சமுதாயத்தின்பிம்பம், கலைஞர்கள்மக்களின் மன ஓட்ட த்தின் வடிகால், அறிவியலறிஞர்கள் தேசத்தின் வலிமைக்கும் பெருமைக் கும் வழிகாட்டிகள், இவர்களெல்லாம் உணர்ச்சிக்கு பலியானால் தேசத்தி ன் மதிப்பும் உலக அரங்கில் மரியாதையும் காணாமல் போய்விடும்.
உணர்ச்சி வசப்பட்டு வீசப்படுகிற தீப்பந்தத்தால் ஊர் எரிந்து சாம்பல்ஆகும். உரச்ச சிந்தனையுடன் உணர்வு பூர்வமாய் ஏற்றுகிற ஒளியால் உலகமே வெளிச்சம் பெறும்.
இந்த தேசத்திற்கு இப்போது உடனடியாய் தேவை கிளர்ச்சியைத் தூண்டிவிடும் உணர்ச்சியல்ல… அமைதியையும் ஆனந்தத் தையும் மலரச் செய்யும் உணர்வுதான்.
|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
உதயம் ராம் : 94440 11105
|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\