அதிரவைத்த எழும்பூர் தபால் நிலையம்!
அதிரவைத்த எழும்பூர் தபால் நிலையம்!
உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர். ஆம் 1764ல்
இந்திய தபால் துறை தொடங்கப்பட்டது. அதன்பிறகு இந்தயா 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் அன்று . சுதந்திரம் பெற்றது. இந்தியாவை இந்தியர்களே ஆளும் உன்னத நிலை தொடங்கிய காலக்கட்டத்தில் சுமார் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு 333 தபால் நிலையங்களுக்கு மேல் தொடங்கப்பட்டு மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகின் றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள் ளன. இவற்றில் கணிணி மையமாக்கப்பட் டுள்ள தபால் நிலையங்களின் எண்ணிக் கை 12 ஆயிரத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது என்றால் இந்தி யர்களான நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம் தான் என்றாலும் ஒரு சில குறைகள் இருக்கவே செய்கின்றன•
இன்றும் பல தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் சரியான பராமரிப்பின்றி பாழடைந்தும், மழைக்காலத்தில் ஒழுகுவதால், கட்டிடத் தினுள் நீச்சல் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதுமாக இருப்பதால், அங்கு பணியாற்றும் தபால் ஊழியர்கள் மிகுந்த சிரம்த்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதன்மூலம் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புக்க ள் அதிகம். மேலும் முக்கிய கடிதங்கள், மணியார்டர்கள் தபால்கள், பத்தி ரிகைகள், பார்சல்கள் என பலவற்றை இந்தயா எங்கும் பட்டுவாடா செய் யப்படுவதால், இங்கு வைக்கப்படும் பத்திரிகைகள், பார்சல்கள் அனைத் தும் கட்டிடத்தில் இருந்து ஒழுகும் மழைநீரினாலும், கட்டிடத்திற்குள் தேங்கிக்கிடக்கும் மழைநீரினாலும் ஈரமாகி, பாழாகி விடுகின்றன• இதனால், பல பத்திரிகைகள் பார்சல்கள் உரியவர்களது கைகளுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
உதாரணத்திற்கு ஒரு தபால்நிலையத்தை எடுத்துக்கொள்வோம்.
எழும்பூரில் உள்ள CHENNAI SORTING DIVISION, CHENNAI-னை எடுத்து க்கொள்வோம். இந்த தபால் நிலையம் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. ஆல்பர்ட் திரையரங்கிலிருந்து சென்றால், இரயில நிலையம் தாண்டியும், மகப்பேறு அரசு மருத்துவமனையில் இருந்து சென்றால், சிறிது தூரத்திலேயும், உள்ளது இன்னும் சொல்ல வேண்டு மென்றால், எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்பட்டு HOT CHIPS என்ற உணவகத்தின் பின்புறத்தில் உள்ளது. இங்கு பல பத்திரிகைகள், மாத இதழ்கள் உட்பட பார்சல்களை இந்தியாவெங்கும் பட்டுவாடா செய்யப் பட்டு வருகின்றன•
இந்த தபால்நிலையத்தின் அவலநிலையை அங்குள்ளவர்களின் அனுமதி யோடு படம்பிடிக்கப்பட்டு, அவற்றில் சில படங்களை இங்கே பகிரப் பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த எழு ம்பூர் தபால் நிலையத்தை தற்காலிகமாக நல்ல கட்டிடத்திற்கு மாற்றி, இப்போதிருக்கும் கட்டிடத்தை, முறையாக பழுதுபார்த்து புதுப்பித்துத் தர வும், இதுபோன்ற அவல நிலையில் செயல்பட்டுவரும் தபால் நிலையங் களை அடையாளம் கண்டு, அவற்றையும் தரமான கட்டிடத்தில் செயல் பட ஆவன செய்ய வேண்டுமென விதை2விருட்சம் இணையம் இங்கே வேண்டுகோள் விடுக்கிறது.
ஒளிப்படங்கள் & செய்தி – விதை2விருட்சம் குழு