இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக பழிவாங்கிய சூர்ப்பனகை! – அறியா அரிய கதை
இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக பழிவாங்கிய சூர்ப்பனகை! – அறியா அரிய கதை
இராமாயணப் போரில் இராவணன் வீரமரணம் அடைந்த பிற்பாடு இராவ ணனின் தங்கை சூர்ப்பனகை, சீதையை
எப்படியும் பழி வாங்க வேண்டு மென்று முடிவெடுத்தாள். அவள் போட்ட தந்திர நாடகத்தில் சீதை பலியானாள் எப்படி என்றால்?.
ஒருநாள் அழகிய நங்கையாக உருமாற்றம் பெற்று சீதையின் நட்பும், நம்பிக்கையும் நெடுநாட்களாக பெற்றுக்கொண்ட பிற்பாடு. ஒரு மாறுவேடத்திலுள்ள சூர்ப்பனகை சீதையிடம் கேட்டால் எனக்கு இராவண ணின் உருவத்தை வரைந்து தரும்படி (சீதை ஓவியம் வரைவதில் நிகரானவள்) சீதை அதை மறுத்தாள், பின் சூர்ப்பனகை தனது சுய ரூபத்தை காண்பித்துக் கேட்டாள். “நான் கேட்பது எனது அண்ணணின் உருவத்தை, இவ்வுலகில் இராவணன் தனது சுய ரூப த்தை உனக்கு மட்டுமே காண்பித் தான் அதைவிட நீ நல்ல ஓவியக்காரி எனக்கு தயவுசெய்து அண்ணனி ன் உருவத்தை வரைந்து தரும் படியும் இல்லாவிடில் இவ்விடத்தில்தற்கொலை செய்வதாகவும் ” சொன்னாள், பின் இராவண னின் உருவத்தை வரையத்
தொடங்கினாள் சீதை. வரைந்துகொண்டிருக்கையில் இராமன் சீதையை கூப்பிட்டார். சீதை, தான் வரைந்து கொண்டிருந்த இராவணனின் ஓவியத்தை தனது தலையணை யின் கீழே வைத்து விட்டு இராமர் நோக்கிச் சென் றாள். இதற்கிடையில் சூர்ப்பனகை போட்டு வாங்கிவிட்டாள். இராமரின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல், தான் வரைந்து கொண்டிருந்த இராவ ணனின் ஓவியம் தனது தலையணையின்கீழ் உள்ளதை ஒப்புக் கொண் டாள்.
இராமன் தன் கற்பின்மீது சந்தேகப்பட்ட காரணத் தினால் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக தீ குளித்தால் என்றும் அவள் மீண்டும் தன் தாயுடன் ஐக்கியமானாள் என்றும் இராமாயணக் கதை ஒன்றுள்ளது. இதில் இருந்து தனது தந்திரத்தி னால் சீதையின் நட்புக்கு, நம்பிக்கைக்கு சூர்ப்ப னகை குற்றம் இழைத்தாள். ஏன் பாரதக் கதையி லும்கூட பல தந்திரங்கள் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!