Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – ராகி (கேழ்வரகு) உருண்டை

சமையல் குறிப்பு – ராகி (கேழ்வரகு) உருண்டை

சமையல் குறிப்பு – ராகி (கேழ்வரகு) உருண்டை

தினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால்… இடுகை கடந்த மாதம் 27ஆம்தேதி பகிரப்பட்ட‍து. இந்த இடுகை க்கு கிட்டத்தட்ட‍ 500க்கும் மேற்பட்ட‍

வாசகர்கள் பாராட்டியுள்ள‍னர். மேலும் அவர்கள் இந்த ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைப்ப‍து எப்ப‍டி என்று கேட்டிருந்தனர். அவர் கள் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இந்த இடுகை பகிரப்பட்டுள் ள‍து.  சமையுங்கள் ருசியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள்.

ராகி (கேழ்வரகு) உருண்டை

தேவையானவை:

கேழ்வரகு மாவு – ஒரு கப்
வெல்லம் – 1/2 கப்
முந்திரி – 5
ஏலக்காய் – 1
நெய் – தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டுக் காய்ந்ததும் முந்திரியைப் போட்டு பொன்வறுவலாக வறுத்தெடுத்துக் கொண்டு, மீண்டும் அதே வாணலில் கேழ்வரகு மாவைப்போட்டு தோசைத்திருப்பியால் கிளறவும். தீ மிதமாக இருக்கட்டும். விடாமல் கிளறிவிட்டுக் கொண்டேயிருக்கவும்.

மாவு நன்றாகசூடேறி வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும். ஏலக்காயைப் பொடித்துவைக்கவும். ஒருபாத்திரத்தில் வெல் லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும்அளவு சிறிது தண் ணீர்விட்டு அடுப்பில் ஏற்றவும். தீ மிதமாகவே இருக்கட்டும். அதிகமானால் வெல்லம் அடியில் பிடித்து தீய்ந்துபோகும்.

வெல்லம்முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொ ங்கிவரும். அப்போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக் கொண்டே விடாமல் கிளறவும். முந்திரி, ஏல த்தையும் சேர்த்துக்கொள்ளவும்.

மாவு கைபொறுக்கும்சூடாக இருக்கும்போது வேண்டிய அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். இப்போ து நல்ல வாசனையுடன் கூடிய, சத்தான,சுவையான கேழ்வரகு மாவு உருண்டைகள்/லட்டுகள் தயார்.

=> சுகந்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: