Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! – விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை

பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! – விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை  

பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! – விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை  

மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள், வெற்றி மிதப்பில் களியா ட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக,

நிகழ்ந்த இறப்பினால் உண்டானதோஷம் கருதி துயரம் அடைந்தனர். தங்களின் ரட்சகனான கிருஷ்ணரிடம் பாவவிமோசனம் தீரவழி கேட்டன ர். அவர் ஒரு கரியநிற தண்டமும், கருப்பு மாடு ஒன்றையும் வரவழைத்து, இக்கருப்பு தண்டத்தினை கையிலெடுத்துக் கொண்டு, இம்மாட்டினைப் பின் தொடருங்கள். இவ்விரண்டும், எங்கு வெள்ளை நிறமாக மாறுகின்ற தோ, அங்கு, இறைவனை மனம் உருகிவழிபடுங்கள். உங்களின் போரினா ல் உருவான பாவங்கள் விலக இறைவன் அருள்புரிவான் என்றார். அதன் படியே, அவர்கள் மாட்டினைப் பின்தொடர, கோலியாத்தில் தண்டமும், மாடும் வெள்ளைநிறம் அடைந்தது. அவ்விட்த்திலே ஒரு குளம் வெட்டி, நீராடி, ஐவரும் இறைவனைக்குறித்து தியானித்தனர். ஐவருக்கும் ஐந்து சிவலிங்கம் நந்தியுடன் சுயம்புவாக எழுந்தருளி, பாவ விமோசனம் அளி த்தான் இறைவன். இது புராண வரலாறு.

இத்தகைய சிறப்பு பெற்ற இடம்:

குஜராத் மாநிலம் – பாவ் நகரம் – கோலியாக். சென்னை சென்ட்ரலில் இரு ந்து குஜராத்தின் ஆமதாபாத்திற்கு, நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிற து. அங்கிருந்து, பாவ்நகர். பாவ்நகரில்இருந்து கோலியாக்கிற்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. (முப்பது கி.மீ)

கோலியாக் நிஷ்கலங்க் மகாதேவ் கோயில் – ஆர்ப்பரிக்கும் ஆக்ரோஷ அலைகள் காணப்படும் கோலியாக் கடலில் ஆலயம் – மகாதேவரின் ஆற்ற லை உணரச்செய்யும் சிவாலயம்.

காலை 8:30வரை ஆர்ப்பரிக்கும் அலைகள் சிறிதுசிறிதாக உள்வாங்க ஆர ம்பிக்கின்றது. கோயிலைநோக்கி, அதுவரை பொறுமை காத்திருந்த மக்க ள், கோயிலை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். கோலியாக் கடலின் நடு வே அமைந்துள்ள இறைவனை உற்சாகத்துடன் சரண கோஷமெழு ப்பி, ஆர்வத்துடன் தரிசிக்க செல்லும் பக்தர்கள், இனிப்புச்சுவை நிறைந்த குளத்தில் குளித்து, தேங்காய் உடைத்து இறைவனை தரிசிக்கின்றனர். பக ல் பனிரெண்டு முப்பது நெருங்கும் நேரத்தில் அமைதி காத்த கடல் மறுபடி யும், ஆர்ப்பரிக்க சிறிது சிறிதாக கரையை நோக்கி முன்னேற ஆரம்பிக்க பக்தர்களும் கரையைநோக்கி விரைந்து வருகின்றனர். சிலநிமிடங்களில் , கோயிலின் பட்டொளிவீசும் கல்தூண், கொடிமரம் புள்ளியாகத்தெரிகின் றது.

எத்தனை புயல்சீற்றம் கொண்டபோதிலும், பூகம்ப நிகழ்வு நடந்தபோதிலு ம், கொடி மரமோ, கல் தூணோ பாதிக்கப் படவில்லை என்பது ஆச்சரியப் பட வைக்கும் செய்தி.

அமாவாசை பவுர்ணமி தின்ங்களில் உள்வாங்கல் கடலில் அதிகம் இரு க்கும். இந்த நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. இவ் வாலயத்தினை தரிசிப்பதனை ஒரு பாக்கியமாக கருதி, பாவவிமோசன ம் தேடி பெருவாரியான மக்கள் சென்று வருகின்றனர்.

தென்னகத்தில்உள்ள ராமேசுவரம், கேரளமாநிலத்தில் உள்ள குருவாயூர், ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம், குஜராத்தில் கோலியாக்கில் உள்ள நிஷ் கலங்க் மகாதேவ் ஆலயம் ஆகியன பெரும்சிறப்பு பெற்ற ஆலயங்கள்.

மன முருகி, இறைவனை வழிபட்டு, இறைவழியாம் அன்பினது வழியில் செல்பவர்களுக்கு மிகுந்த மாற்றம் நிகழ்த்தும் ஆலயங்களாகும்.

கோலியாக்கில் ஜூலை 27 to ஆகஸ்ட் 24 வரை திருவிழாக்கோலம் தான். ஆவணி மாதம் சிவனுக்குரிய மாதம். திட்டமிடுங்கள். உங்களின் பொரு ளாதார நிலையை சரிசெய்து கொண்டு, முடிவெடுங்கள். முடிந்தால் முடி யாதது எதுவுமில்லை. இறை தரிசனத்திற்காக ஏங்குவோருக்கு நிச்சயம் வழி கிடைக்கும்.

ஓம்!…..ஓம்!….ஓம்!……..ஓம் சிவாய நம!…..ஓம் சிவாய நம!….ஓம் சிவாய நம!…ஓம்!…..ஓம்!…..ஓம்!.

-அட்சயாவின் கிருஷ்ணாலயா

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: