பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
பேரிக்காய்- இதனை நாட்டு ஆப்பிள் என்ற ஒரு பெயரும் உண்டு. மேலும்
ஆப்பிள் பழத்தில் இல்லாத வைட்டமின் A இதில் நிறைந்து காணப்படுகிறது. இந்த பேரிக் காய் எல்லா காலங்களிலும் கிடைக்காது. இ ந்த பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
பேரிக்காய் சாப்பிட்டால் நமது உடலுக்கு நல்ல சுண்ணாம்புச் சத்தும், இரும்பு ச்சத்தும் கிடைக்கும். எலும்புகள், பற்கள் பலப் படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நல்ல பசியும் எடுத்து ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு கட்டுப்பட்டு ஆரோக் கியம் மெல்ல மெல்ல உண்டாகும்.
மேலும் சிலருக்கு திடீரென இதயம் படபடக்கும். ஒரு வித மன தில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் அச்சமயத்தில் இந்த பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.