நடிகர் சங்க விவகாரம் – நடிகர் விஷால் திணறல்!
நடிகர் சங்க விவகாரம் – நடிகர் விஷால் திணறல் !
கடந்த மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பெருவெற்றி பெற்று தலைவராக நாசரும், செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும், பொறுப்பேற்றதில் இருந்தே
நடிகர் சங்கத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டு வருகின்றனர் என்பது அறிந்த விஷயமே!
“தற்போது நடிகர்சங்க அறக்கட்டளையின் பல லட்சம் ரூபாய் செலவு கணக்குகளுக்கு ரசீதுகள் இல்லாததா ல், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, ‘கோலிவுட்’ வட்டாரங்கள் கூறியதாவது:
நடிகர்சங்க நிர்வாகிகள் தேர்தலில் விஷால்அணி வெற்றி பெற்றபின், நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பதவி, நடிகர் கமல் ஹாசனுக்கு வழ ங்கப்பட்டது. நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட குழு அமைக்கப் பட்டது. 10 ஆண்டுகளின், வரவு – செலவு கணக்கு வழக்குகளை சரிபார்க்க, ஆடிட்டர் தலைமையில், சிறப்பு தணிக்கை குழு நியமிக்கப்பட்டது.
நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் வரவு – செலவு தொடர்பான ஆவணங்களை, புதிய நிர்வாகி களிடம், முன்னாள் தலைவர் சரத்குமார் வழங்கி னார். அந்த ஆவணங்கள், சிறப்பு தணிக்கை குழுவி டம் ஒப்படை க்கப்பட்டது.
நடிகர்சங்க அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே செலவு செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய்க்கு, ரசீதுகள் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்ததும், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட சங்கநிர்வாகிகள் அ
திர்ச்சி அடைந்தனர்.
இதனால், நடிகர் சங்கம் சார்பில் ஏற்கனவே வைக் கப்பட்டிருந்த, ஐந்து வங்கிகளின் கணக்குகளை தொடர, புதிய நிர்வாகிகள் விரும்பவில்லை. நடிகர் சங்கம் சார்பில் புதிதாக, இரண்டு வங்கிகளில் புது க்கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ‘கோலிவுட்’ வட்டாரங்கள் தெரிவித்தன.“
– தினமலர் நிருபர் –