கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி வழிபடும் விநோதம்!- ஆச்சரியமான ஆன்மீக தகவல்
கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி வழிபடும் விநோதம்! – ஆச்சரியமான ஆன்மீக தகவல்
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்று, கோட்டைகளில் தலைமைச் செயலகங்களில், பள்ளிக்கூடங்களில், அரசு அலுவலங்களி ல், மிக குறிப்பிட்ட இடங்களில்,
அல்லது ஒருசில சாலை சந்திப்புக்களில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, வணங்கிமரியாதை செலுத்துவது வாடிக்கையான விஷயம்தா ன். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவில் கோபுரத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
உண்மைதான்! ஆம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த ஆகஸ்டு 15 ஒவ்வொரு ஆண்டும் அன்று காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர் முன் வைத்து பூஜை செய்கிறார்கள். அதன்பின் அந்த தேசியகொடியை அர்ச்சகர் மிகுந்த பக்தியுடன் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோ வில் கிழக்கு கோபுரத்தில் அந்த தேசியக் கொடியை ஆலய தீட்சிதர் ஏற்று கிறார். இந்நிகழ்வு நடைபெறும்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்துவிட்டு பின் கடவுகளை வழிபட செல்கிறார்கள். இதுபோன்ற ஒரு நிகழ்வு வேறு எந்தக் கோவிலி லும் இல்லை என்பது இதன் சிறப்பினை உணர்த்துவதாக உள்ளது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!