முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்த கலைஞர் கருணாநிதி! – எதிர்பாராத திருப்பத்தில் தமிழகம்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்த கலைஞர் கருணாநிதி! – எதிர்பாராத திருப்பத்தில் தமிழகம் இது குறித்து
கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரலாறு காணாத மழை, மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை சேதாரப்படுத்தி, ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகி யிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது மேலும் கவலை கொள்ள வைக்கிறது.
இந்நெருக்கடியான தருணத்தில், தமிழக மக்களை க் காப்பாற்ற அரசு எடுக்கும் அனைத்து நிவாரணப் பணிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தன து முழு ஆதரவை அளிக்கிறது.
மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044-24320280 அல்லது 7810878108 ஆகிய இரு எண்களில் திமுகவின் தலைமைக் கழகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அதுபோல் திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட க் கழக அலுவலகங்களையும் அந்தந்த தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். எங்கெல்லாம் உதவிதேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் திமுக தொ ண்டர்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் தங்க ளை முழுமனதோடு ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக அரசு, அந்த அரசை ஆளும் முதல்வர் ஜெயலலிதாவு க்கு கலைஞர் தெரிவித்த முழுஆதரவு ஒரு ஆரோக்கி யமான விஷயத்தின் தொடக்கமாக இருக்கட்டும். அதா வது அனைத்து கட்சிக ளும் ஒன்றிணைந்து இந்த பெரு த்த சேதத்தின்போது மட்டுமல்ல மற்ற நேரங்களிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் அவா!
It shows your cruel mentality… DMK always will come down for common people…and… this is not the first time for DMK….But people like you happy to write like DMK under ADMK’s feet… you never write about arrogant of ADMK, as you are one among them…