Sunday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனிடம் வந்த‌ பார்வதி தேவி! – கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்!

சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனை நெருங்கிய‌ பார்வதி தேவி! – கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்!

சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனை நெருங்கிய‌ பார்வதி தேவி! – கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்!

சிறு வயது முதலே எத்தனை முறை இராமாயணம் பிறர் சொல்ல‍க் கேட்டி ருந்தாலும், படித்திருந்தாலும் அதில் உள்ள‍

நாமறியாத கதைகள் நிறையவே உண்டு. அக்கதைகளில் மிகவும் குறிப் பிடத்தக்க‍ நிகழ்வாக இந்நிகழ்வு கருதப்படு கிறது.

ஒருநாள் சிவபெருமான் தன் மனைவியாகிய பார்வ திதேவியிடம் இராமனின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக இராமனது ஏகதார விரத மேன்மையைப் பலவாறு புகழ்ந்தார்.

“வேறு யாராவது சீதையைப்போல் மாறு வேடமணிந்து வந்தால் இராமன் ஏமாற மாட்டானா? ஏமாறுவது மனித இயல்புதானே! இராமன் சாதாரண மனிதன் தானே?” என்று பார்வதி தேவி மறுதலித்துப் பேசினாள்.

“இராமன் மனிதனாகத் தோன்றினாலும் அவன் பரம்பொருள். அவனுக்குத் தெரியாத ரகசியம் எதுவுமே உலகில் இல்லை” என்றார் சிவபெருமான்.
“நான் இராமனை சோதித்து வென்று, அவன் பரம்பொருள் அல்ல; மனிதன் தான் என்று காட்டுகிறேன்” என்று சபதம் செய்தாள் பார்வதி தேவி.

“மனைவியைப் பிரிந்தவன் பரம்பொருளானால் சீதை இருக்கும் இடத்தை உணர்ந்து கொள்ள மாட்டானா? இப்படிக் காடெல்லாம் அழுது கொண்டு திரிவானா? ஆதலால் இராமன் பரம்பொருள் அல்ல என்பது உறுதி” என்று மேலும் கூறினாள் பார்வதி தேவி. பின்னர், சீதையாக உருவெடுத்துக் கொண்டு இராமன் வரும் வழியில் சென்று நின்று கொண்டிருந்தாள்.

நடுவழியில் சீதை உருவில் பார்வதியைக் கண்ட இராமன், “சகோதரி , நீ உன் கணவர் உடலில் பாதியாக உள்ளவள் அல்லவா! இப்போது பிரிந்து ஏன் இங்கு வந்தாய்? உன் கணவர் உனக்காகக் காத்திருப்பார். உடனே புறப்படு!” என்றான் இராமன்.

“சீதை உருவிலிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொண்டு “சகோதரி’ என்றழைத்தமையால் பிறர்மனை நோக்கா பேராண்மை இராமனிடம் உள்ளது. ஆதலால் இராமனைப் பரம்பொருள் என எண்ணத் தடையில்லை. என் சோதனையில் இராமன்வென்றான். நான் தோற்றேன்’ என்று நாணமுற்ற பார்வதிதேவி, அக்கணமே சிவனிடம் சென்று, தான் இராமனை சாதாரண மனிதன் என்று எண்ணியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

=> சசி ரமா

Leave a Reply