நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! – எரிச்சலில் தயாரிப்பாளர்
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே
அவர்களின் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தி விடு வார்கள். அந்த வகையில், முதல் படத்தில் 3 லட்சம் சம் பளம் வாங்கும் நடிகைகூட மூன்றாவது படத்திலேயே 30 லட்சம் வாங்குவார்கள். அடுத்து முன்னணி ஹீரோ க்களுக்கு ஜோடியானதும் 50, 60 லட்சமாக உயர்த்தி விடுவார்கள்.
அதேசமயம், வில்லேஜ் கதைகளில் நடிக்கும் நடிகைக ளுக்கு அப்படி யாரும் சம்பளம் கொடுப்பதில்லை. அவ ர்கள் நடிக்கும் படங்கள்தொடர்ந்து வெற்றி பெற்றாலும்கூட 5 லட்சம் கொ டுக்கவே யோசிப்பார்கள். இந்நிலைதான், இதுவரை லட்சுமிமேனன் விச யத்திலும் இருந்து வந்தது. அவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என பல படங்கள் ஹிட் டானபோதும், வில்லேஜ் நடிகை என்கிற ஒரே காரணத்திற்காக அவருக்கு குறைவான சம்பள மே கொடுத்து வந்தனர்.
ஆனால், இந்நிலை வேதாளம் படத்திற்கு பிறகு அடியோடு மாறிவிட்டது. காரணம், அந்த படத்திற்கு 20 லட்சம் சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், விசயம் அஜித்தின் காதுக்கு சென்றபோது இன்னும் கூடுதலாக கொடுக்குமாறு சொன்னதோடு மட் டுமல்லாமல் அதிரடியில் இறங்கி, அந்த தயாரிப்பா ளர் முழுமனதுடன் சம்மதிக்கும்வரை அவரை விடவில்லை யாம். தயாரிப்பாளரும் வேறு வழியில்லாமல் லட்சுமி மேனனுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். அதனால் இப்போது லட்சுமி மேனன் கேட்காமலேயே ஜெயம் ரவிக் கு ஜோடியாக அவர் நடித்து வரும் மிருதன் படத்தில் லட் சுமிமேனனுக்கு 40 லட்சம் சம்பளம் பேசியுள்ளனர். அட் வான்ஸ் பண்ணும்போதே 25 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டதாம். படத்தி ல் நடித்து முடிப்பதற்குள் மீதமுள்ள 15 லட்சமும் கொடுக்கப்
பட்டு விடுமா ம். ஆக, இந்தபடமும் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து கமிட்டாகும்படத்தில் லட்சுமிமேனனி ன் சம்பளம் 50லட்சமாகிவிடும் என்கிறார்கள்.
லட்சுமிமேனன் தனது சம்பளத்தை அதிரடியா க உயர்த்தக் காரணமாக இருக்கும் அஜித்மீது சில தயாரிப்பாளர்கள், மிகுந்தஎரிச்சலுடன் கடுப்பில் இருக்கிறார்களாம். காரணம் லட்சுமிமே னனை வைத்து இன்னும் சில திரைப்படங்கள் எடு த்து லாபம் ஈட்டலாம் என்ற எண்ணியிருந்தார்க ளாம், அதற்குவேட்டு வைத்துவிட்டாரே இந்த அஜித்
லட்சுமிமேனனின் இந்த அதிரடி சம்பள உயர்வைப் பார்த்து குறைவான சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிராமத்து கதைகளில் அதிகமாக நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்ட நடிகைகள் தாங்களும் சம்பளத்தை உயர்த்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதன் காரண மாக இவர்களை வைத்து படமெடுக்கும், படமெடுக்கவிருக்கும் தயாரிப்பா ளர்கள் அஜித் மீது எரிச்ச லில் இருக்கிறார்களாம்.