மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?
மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?
அன்புள்ள அம்மாவிற்கு,
நான், 47 வயது ஆண்; என் தங்கை வயது, 40. அவளது, 18வது வயதில், சொந்தத்தில்
திருமணம் செய்துகொடுத்தோம்; ஒருமகன் உள்ளான் . கல்லூரியில் கடைசி ஆண்டு, விடுதியில் தங்கி படிக்கிறான். ‘கேம்பஸ்’ இன்டர்வியூவில் பெரிய கம் பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. இன்னும் இர ண்டு மாதத்தில் படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்து விடுவான்.
தங்கையின் கணவர், குடிப்பழக்கம் உள்ளவர். டாக்டரிடம் காண்பித்து, ஓரளவு குடியை குறைத்தார். ஆனாலும், திடீர் உடல் நலக்குறைவால், ஒரு ஆண்டுக்குமுன் இறந்துவிட்டா ர். அவளது மாமனார், மாமியார் முன் பே இறந்து விட் டதால், கணவர் இறந்த பின், தற்போது எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள். ஆனால், மிகவும் மன அழுத்தத்தி ல் உள்ளாள். மனநல மருத்துவரிடம் காண்பித்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறாள்.
இச்சூழ்நிலையில், தங்கையின் தோழிகள், ‘இனிமேல், நீ தனியாக இருப் பது, நன்றாக இருக்காது; மறுமணம் செய்து கொள்’ என்றுஆலோசனை கூறியிருக்கின்றனர். அதனால் , ‘மறுமணம்செய்தால் நன்றாக இருக்குமா …’ என்று குழம் புகிறாள்.
அவளது திருமண வாழ்வு, சிறப்பாக அமையவில்லை என்ற வருத்தம், எனக்கும், என் பெற்றோருக்கும் ரொம்பவே உள்ளது. ஆனால், திருமண வயதில் மகன் இருக்கும்போது, இவள் மறுமணம் என்பது, எங்களுக்கு, மிகுந்த மன உளைச்சலாக உள்ளது.
இவள் மறுமணத்தை, தங்கையின் மகன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்ற குழப்பமும், இரண்டாவ து திருமணமும், சரியாக அமையாமல் போய், மகனும் இவளை கைவிட் டால், இவள் நிலை மிகவும் மோசமாகி விடுமே என்று எண்ணுகிறோம்.
பொருளாதார ரீதியில், அவளுக்கு எந்தக் கஷ்டமும் இல் லை. தேவைக்கு பணம் உள்ளது. மறுமணம் இவளுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா என்ற சந்தேக ம்தான் எங்களை வாட்டுகிறது. தயவுசெய்து, நீங்கள் தான் இதற்கு ஒரு நல்ல தீர்வை கூற வேண்டும்.
இப்படிக்கு
பெயர்சொல்ல விரும்பாத தங்களின் அன்பு மகன்
அன்புள்ள மகனுக்கு,
வாழ்க்கை, ரம்மிபோன்றது; எப்ப ஜோக்கர் வந்து , ‘டிக்’ அடிப்போம்; எப்ப ரம்மி ஆகாமல், ‘புல்’ ஆவோம் என்பது விளையாடும் யாருக்கும் தெரி யாது.
உலகில் உள்ள எல்லா ஆண்களும் கெட்டவர்களோ, குடிகாரர்களோ அல்ல. நல்ல புரிதல் உள்ள ஆண், உன் தங்கைக்கு 2 வது கணவராக அமையலாம். அதேசமயம், தற் கால சூழலில், குடிக்காத ஆண்கள் அபூர்வம். உன் தங்கையின், இரண்டாவது கணவரும் குடிநோயா ளியாய் இருந்து விட்டால், அது இன்னும் சிக்கலில் முடிந்து விடும்.
அத்துடன், ஏற்கனவே, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட உன் தங்கை, மறுமணத்திற்கு மனதளவில் தயாரில்லை. அவரால் இரண்டாவது கணவரைசமாளிப்பது, மிகவும் சிரமம். மேலும், வளர்ந்த எந்த மகனும் தன் தாயாரின் மறு மணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான். உன் தங்கை மகனும் இதற்கு நிச்சயம் உடன்பட மாட்டான்.
மறுமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான ஆண்களும், திருமணமாகி மனைவியை இழந்திருப்பர்; குழந்தைகளும் இருப்பர். அவ ர்கள், உன் தங் கையை தாய் என்றும், உன் தங்கை மகன், இரண்டாவது கணவரை தந்தை என்றும், ஒரு நாளும் ஏற் றுக் கொள்ள மாட்டார்கள்; உறவு சிக்கல்கள் அதிகரிக்கும்.
ஆனாலும், உன் தங்கையின் மகனுக்கு, அவன் தாயின் மறுமணத்தை பற்றி, முதலில் தகவல்தெரிவி. அத்துடன் உன்தங்கை மறு மணத்திற்கு மனதளவில் தயாராக இருக்கிறாளா என்பதுக் குறித்து, மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நலம்.
பணத்தாசை பிடித்த தரகர்கள் மூலம் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம். உங்கள் சமூகம் சார்ந்த திருமண மைய வலை தளத்தை அணுகி வரன் தேடலாம். இரண்டாவது திருமண த்தில், உன் தங்கையின் தேவை என்ன, கணவனாய் வரப் போறவனின் தேவை என்ன என, இருபக்கமும் விவா தித்து தெளிவு பெறு.
உன் தங்கையின், இரண்டாவது திருமணம் வெற்றி பெற இதயப்பூர்வமா ன வேண்டுதல்கள்.