Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்க் கிழமை அம்மனை பூஜித்து வந்தால் . . .

வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் . . .

வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் . . .

ஆண், பெண் இருபாலாரும் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ் வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால்  அவர்களுக்கு

இருந்துவரும் திருமணதோஷம், செவ்வாய்தோஷம் உட்பட சிலதோஷங் கள் நீங்கி எந்த தடையும் இன்றி திருமணம் இனிதே நடைபெற்று பிள்ளைப்பேரும் பெறுவார்கள் என்கிறார் கள்.

இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்ல து வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர் சில்வர் தட்டில் வைத்துவழிபடலாம். அத்துடன், செல் வத்திற்கு அதிதெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடி மாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வண ங்குகிற புரட்டாசி பௌர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பௌர்ணமி யிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களா ல் சங்கினையும், லட்சுமி யையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகிய வைகளை பசு நெய்யில் செய்து பால் பாயாசம் செய்து பசுநெய் ஊற்றி விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.

இப்படிச்செய்தால் எல்லா வித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் சங்கிற்கு பூஜை செய்யலாம். ஒவ் வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது தண்ணீரைக்குடித்துவிட்டு, சிறிது தண் ணீரை வாசற் படியில் தெளிக்கவும்.

இப்படி 90நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும். வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதை கள் நெருங்காது. இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய் து அதை அருந்தினால் வியாதிகளும் குணமடையும். மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாத விலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

=>மா   மாலா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: