Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம தர்மனையே அஞ்சி நடுங்கவைத்த‍ சிறுவன்! – ஊரறியா ஓர‌ரிய தகவல்

எம தர்மனையே அஞ்சி நடுங்கவைத்த‍ சிறுவன்! – ஊரறியா ஓர‌ரிய தகவல்

எம தர்மனையே அஞ்சி நடுங்கவைத்த‍ சிறுவன்! – ஊரறியா ஓர‌ரிய தகவல்

எமன் என்ற சொன்ன‍தும் அஞ்சாதவர் எவரும் இல்லை இந்த உலகில் ஆனால் எமனையே ஒரு சிறுவன் கதிகலங்க

செய்த ஆச்சரிய அபூர்வ செய்தியைத்தான் இங்கு பார்க்க‍விருக்கிறீர்கள்.

அதிதியை தெய்வமாக நினைப்பது, அவனை க் கவனிக்காவிட்டால் தெய்வக் குற்றம் செய்த மாதிரி பயப்படுவது, இதெல்லாம் நம் மதத்தின் முக்கியமான அம்சங்களாகும்.

எமன் என்றால் நாம் எல்லோரும் கதிகலங்கு கிறோம். அப்படிப்பட்ட யமனே கதிகலங்கி விட்டதாகக் கடோபநிஷத்தில் ஒருகதையில் வருகிறது. அவன் யாரிடம் பயப்பட்டான்? ஒரு சின்ன பிள்ளையிடம் தான் பயப்பட்டான்! ஏன் பயப்பட்டான்? இப்பையன் யமனு டைய க்ருஹத்துக்கு வந்து 3நாட்கள் எதுவும் சாப்பிடா மல் பட்டினி கிடந்துவிட்டான்! (அவன் ஏன் வந்தான் என்பது வேறு கதை) அதிதி ஒருவனின் வயிற்றுக்குப் போடாவிட்டால் அது மஹா அபசாரமாகுமே என்றுதா ன் ஸாக்ஷாத் யமனே பயந்து விட்டான். ஸர்வ லோகத் தையும் நடுங்கச் செய்கிறவன் இந்த வாண்டுப் பயலிடம் நடுங்கிக்கொண்டு வந்து, “என் க்ருஹத்தில் ராத்திரி சாப்பிடாமல் இருந்துவிட்டாய். இதனால் எனக்குதோஷ ம் உண்டாகாமல் இருக்க உனக்கு நமஸ்காரம் பண்ணு கிறேன் அப்பா. ஒவ்வொரு நாள் பட்டினி இருந்ததற்கும் ஈடாக ஒவ்வொரு வரம் வீதம் என்னிடம் மூன்று வரம் வாங்கிக் கொள்” என்று ப்ரார்த்தித்ததாக உபநிஷத் சொல்கிறது.

இங்கெல்லாம் ‘பரோபகாரம்’என்று செய்கிற போது இருக்கக்கூடிய ‘Superiority Complex’ மனப்பான்மை இல்லாமல், உபகாரத்துக்குப் பாத்திரனாகிறவனிடம் பயந்துபயந்து தாழ்ந்து, தெய்வத்துக்குப் பூஜை செய்கிறமாதிரி அவனுக்கானதைச் செய்வதை யே பார்க்கிறோம். பரோபகாரத்தில் ஒரு முக்கி யமான அங்கமான ஈகையில் சிறந்தவர்களை நம்தர்மத்தில் தலைக்குமேல் வைத்துக் கொண் டு கொண்டாடுகிறோம். எத்தனையோ துர்குண ங்கள் இருந்தால்கூட கர்ணன் போன்றவர்களைக் கொடைக்காகவே போற்றுகிறோம்.

காஞ்சி மஹா பெரியாவா சொன்ன‍து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: