தினமும் காலையில் திராட்சைப்பழச் சாறு எடுத்து குடித்து வந்தால். . .
தினமும் காலையில் திராட்சைப்பழச் சாறு எடுத்து குடித்து வந்தால் . . .
திராட்சை பழம் பலருக்கும் பிடித்தமான பழம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பி சாப்பிடுவார்கள். வெறும் ருசிக்காகவே சாப்பிட ப்படும் இந்த திராட்சையில் இருக்கும் மருத்துவத்தையும் தெரிந் துகொண்டு சாப்பிடுங்கள். இதோ இதிலுள்ள சில மருத்துவ குணங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
எப்பேற்பட்ட வயிற்றுப்புண் & குடல்புண் ஆறும். அது மட்டுமல்ல தலைசுற்றல், மலச்சிக்கல், கைகால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாக வோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும். விட்டமின்கள், பொட்டாசியம், சுண் ணாம்பு, இரும்புச்சத்து ஆகியவை அதிகளவுள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத் துக்கொள்ளும் சக்தி உண்டு. மேலும் வாயில் புண் ஏற்பட்டிருந்தாலும் இந்த திராட்சை சாறு அவற்றை முற்றிலும் குணமாக் கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.