உணர்வோம்…. உதவுவோம்…
உணர்வோம்…. உதவுவோம்…
(இந்த (டிசம்பர்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)
இயற்கையின்முன் நாமெல்லலாம் எதுவுமில்லை என்பதற்கு சான்றுதா ன் கடந்த 1 மாதமாக பெய்து வரும் பேய் மழை. வடியாத
வெள்ளத்திற்கும் குறையாத கண்ணீருக்கும் யார் காரணம்? திட்டமிடாத அரசா..? சிந்திக்காத மக்களா..? பணமிருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் இயற்கையை வளத்துப் போட்டவர்களின் சதியா?
ஏரியென்று தெரிந்தும் நிலங்களை விற்கத் துணிந்த அரசும், அரசுக்கு தவறான வழிகாட்டிய அதிகாரிகளும் விளம்பரங்களை விசாரிக்காமல் இடங்களை வாங்கி வீடு கட்டிய மக்களும்… இயற்கையை நேசிக்கத் தெரியா த மனமும்தான் இத்தனைக்கும் காரணம்.
மழை வழக்கத்தைவிட அதிகம்தான் என்றாலும்கூடபெய்கின்ற மழையை தேக்கி வைக்க நம் தமிழகத்தில் எத்தனை ஏரிகள் இருக்கின்றன? இருந்த ஏரிகளிலும் நதிகளி லும் இருந்த மணலெல்லாம் எங்கே போயின? நதியின் பாதைகளை மறித்தது யார்? என்ற கேள் விகளுக்கெல்லாம் இயற்கை இப்போது விடைய ளித்துவிட்டது. இனியாவது எல்லோருமே திருந்த வேண்டும். விழிப்புணர்வு பெறவேண்டும் என்ப தே உரச்ச சிந்தனையின் வேண்டுகோள்.
உறவுகளைத் துறந்து, உரிமையை இழந்து, உணவுக்கும் உறைவிடத்திற்கும், உயிருக்கும் போராடும் அத்தனை குடும்பங்களும் நம் உரத்த சிந்தனையின் அனுதாபங்கள்.
பாதிக்கப்பட்டவர்களுகு ஜாதிமத, இனம் பாரா மல் ஏழை பணக்காரன் என்று வித்தியாசக் கண்ணோட்டமில்லாமல்.. பெரும் வெள்ளத்தி லும் பெருந்தன்மையோடு அரசைவிட அதிக அக்கறை எடுத்துக்கொண் ட அனைத்து தொண்டுள்ளங்களுக்கும் உரத்த சிந்தனை தலை தாழ்ந்து மரியா தை செலுத்துகிறது. வணங்குகிறது.
எடுத்ததற்கெல்லாம் நாட்டை குறை கூறி சகித்துக் கொள்ளும் திராணி இல் லாமல் நாட்டை விட்டு வெளியேறத் துடித்துக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிக ளுக்கு மத்தியில் களத்தில் இறங்கி கைக்கொடுத்து உதவிய ஒவ்வொருவ ரும்தான் இந்த தேசத்தின் நிஜ கதாநாயகர்கள்.
|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
Best Editorial.
I share the sufferings of people all over Tamil Nadu in the recent floods.
It is the fault of govt. and people to illegally occupy/buy plots in water bodies like lakes, river side etc.
Deepening works of water bodies were carried out only on paper. Now every body has to face natures fury due to wrong doing of corrupt officials.
In the name of Development, there is no proper city planning. No proper infrastructure. No proper drainage.
No Disaster management plan. Every thing disastrous.
People want to make political gain out of others services in flood relief works.
God save Tamil Nadu.
Vazhakkam pola unga jaya puraanam paadirukkeenge…. “அரசுக்கு தவறான வழிகாட்டிய” athulerunth theriyuthu..
innum konja naal kazhichchu ஏரியென்று தெரிந்தும் நிலங்களை விற்கத் துணிந்த (DMK) அரசும்……
(ADMK) அரசுக்கு தவறான வழிகாட்டிய அதிகாரிகளும்…. maaththi unga jayavai kaapaaththi konde irunga……. vaazhga ungal jaya pugal paadum puraanam…