கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!
கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!
திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்லது 4 மாதங்களிலேயே
உற்றார் சுற்றார் என எல்லோரும் என்ன ஏதாவது விசேஷமா, இல்லையா, இன்னுமாஇல்ல, அட இத செய், அத செய், இந்த கோவிலுக்கு போ, அந்த கோ விலுக்கு போ, இந்த டாக்டர பாரு, அந்த டாக்டர பாரு என்று ஏகப்பட்ட அறிவுரைகள், வழிகாட்டல் கள் தொந்தரவுகளாக இருந்திருக் கும்.
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது சாப்பிடக்கூடிய உணவு களின் பட்டியலைத் தான் பார்த்திருப்போம். ஆனால் கர்ப்பமாக முயற்சி க்கும்போதும் ஒருசில உணவுகளை உட்கொள் வதன் மூலம் எளிதில் கர்ப்பமாக முடியும். இரு ப்பினும் பெரும்பாலானோருக்கு இந்த உணவு களைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.
ஆகவே கருத்தரிக்க முயலும்போது சாப்பிட வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உணவு களை ஓவுலேசன் காலத்தில் சாப்பிட்டு, உடலுறவில் ஈடுபட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள், கருத்தரிக்கும் வாய் ப்பை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்த உணவு களை உட்கொள்ளும்போது, ஆல்கஹால், காப்ஃ பைன் மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர் க்க வேண்டும். ஏனெனில் இவை கருமுட்டை வளர் ச்சியடைவதில் தடையை ஏற்படுத்தும். சரி, இப்போ து கர்ப்பமாக முயற்சிக்கும்போது சாப்பிடவேண்டி ய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
பீன்ஸ்
பீன்ஸில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரித்து, எளிதில் கர்ப்பமாக வழிவகுக்கும். ஆக வே இந்த உணவுப் பொருளை கர்ப்பமாக முயற்சிக்கும்போது, உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
முழு தானிய உணவுகள்
முழு தானியங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட் டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருக்கும். ஆக வே தினமும் 6 அவுன்ஸ் முழு தானியங்களை உணவி ல் சேர்த்து வந்தால், அது சீக்கிரம் கர்ப்பமாக உதவியா க இருக்கும்.
மீன்
மீன்களில் சால்மன், கெளுத்தி, இறால் மற்றும் சூரை மீன்கள் போன்றவை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரி க்கும். மேலும் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால், அது ஆரோக்கியமான சிசுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
கீரைகள்
கீரை வகைகளான பசலைக்கீரை, லெட்யூஸ், ப்ராக் கோலி போன்றவற்றில் வளமாக இருப்பதால், இதனை ஆண்கள் அதி கம் உட்கொண்டால், விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக் கும்.
கோதுமை பிரட்
கோதுமைபிரட் இரத்தத்தில்உள்ள சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும். இதனால் இனப்பெருக்கத்திற் கு உதவும் ஹார்மோன்கள் சீராக செயல்பட்டு, எளிதில் கர்ப்ப மாக முடியும். எனவே வெள்ளைபிரட்டை தவிர்த்து, கோது மை பிரட்டை உணவில் சேர்த்து வாருங்கள்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதி கரிக்கும் மற்றும் உள்காயங்களை குணப்படுத்தும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில்சேர்க்கும்போது, உடலின் இனப்பெருக்க உறுப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவின் வளர்ச்சி யும் ஆரோக்கியமாக இருக்கும்.
=> மரு. ராகுல்