Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெங்காயத்தின் சாறு எடுத்து, தலையில் தேய்த்து குளித்தால் . . .

வெங்காயத்தின் சாறு எடுத்து, தலையில் தேய்த்து குளித்தால் . . .

வெங்காயத்தின் சாறு எடுத்து, தலையில் தேய்த்து குளித்தால் . . .

வெங்காயத்தை பச்சையாகவோ அல்ல‍து சமைத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும், பல நோய்களை

தீர்க்கும் மருந்தாகவும் இருந்துவருவது மட்டுமல்ல‍. தலைமுடி பிரச்சனை க்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர்தான் காரணம். வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலைமுடி உதி ர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுகிறது. 

எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந் தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலை முடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள். தலைமுடி உதிர்வதைத்தடுத்து, அதன் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க வெங்கா யத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த லாம் என்று பார்க்கலாம்..  

*வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, அந்தசாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போ ட்டு அலசவேண்டும். இந்தசிகிச்சையை வாரம் 2 முறைசெய்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.  

*1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து முடித்தபின், இறுதியில் அக்கலவையைக் கொண்டு தலைமுடியை அலசவேண்டும். இப்படி தலைக்கு குளிக்கும்போது செய்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

குறிப்பு:

இம்முறையை பின்பற்றினால் அடுத்தமுறை தலை க்கு ஷாம்பு போடும் வரை தலையில் வெங்காயத்தி ன் வாசனை இருக்கும்.  

*1டேபிள்ஸ்பூன் வெங்காய சாற்றினை 2டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தட வி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலசவேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மட்டும்தான் பின்பற்ற வேண்டும்.  

*இரவில் படுக்கும்போது ஒரு சிறு வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதனை 1/4கப் ரம்மில் ஊறவைத் து, மறுநாள் காலையில் அந்த ரம்மைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இம்முறையையும் வாரம் ஒரு முறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ரம் மானது தலைமுடியை அதிகம் உலரச்செய்யும்.  

*ஒருசிறு வெங்காயத்தை அரை த்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலி வ் ஆயில் மற்றும் 1 கப் பீர் சேர்த் து கலந்து, தலையில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து, பின் ஷாம்புபோட்டு தலையை அலசவேண்டும். இந்த மாஸ்க்கையும் வாரம் ஒரு முறைதான் மேற்கொள்ள வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply