Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! – அரியதோர் அபூர்வ‌த் தகவல்

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! – அரியதோர் அபூர்வ‌த் தகவல்

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! – அரியதோர் அபூர்வ‌த் தகவல்

திருமால், லட்சுமியின் சாபத்திற்கு ஆளாகி, பின் சிவபெருமானை வணங் கி மனமுருக வழிபட்டு தன்

சாபத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அரிய நிகழ்வினைத் தான் நீங்கள் மேற்கொண்டு படிக்க‍விருக்கிறீர்கள்.

பொய்சொன்னால் மனிதனுக்கு என்னாகும்  என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை  நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒரு முறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லு ம் பொறுப்பை ஏற்றார். விளையாட்டில் பார்வதி வென்றாள்.

ஆனால்போட்டியில் சிவன் வென்றதாகக்கூறிவிட்டார். தன்சகோதரரே இ ப்படிசொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி    கடவுளாகவே இருந்தாலும் பொய்பேசினால், அவர் அதற் குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும்  என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவு பட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள்.

சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங் கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்புவடிவம் மறையும், என்றாள்.  அதன்படி, திருமாலு ம் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்ம நாபர் என்னும் திருநாமத்துடன் சயன கோலத்தில் லட்சுமிதாயாருடன் அருள்பாலிக்கிறார்.

சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற  திரு நாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியி ல் காட்சி தருவது சிறப்பு.  விநாயகரும், முருகனும்  சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சி புரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது  கேதுவுக் குரியதாக திகழ்கிறது.

பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்குமுன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித் து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்ட தோடு, பக்தர்களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்பு டைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண் டையில் வலி வந்து  பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்ம நாபரை வேண்டலாம்.

=> கார்த்திகேயன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: