Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகையே திரும்பி பார்க்க‍வைத்த பத்திரிகையாளர்! – வரலாற்றில் இடம்பிடித்த‍ "அந்த கடிதம்"!

உலகையே திரும்பி பார்க்க‍வைத்த பத்திரிகையாளர்! – வரலாற்றில் இடம்பிடித்த‍ அந்த ஒரு கடிதம்

உலகையே திரும்பி பார்க்க‍வைத்த பத்திரிகையாளர்! – வரலாற்றில் இடம்பிடித்த‍ அந்த ஒரு கடிதம்

உலக மக்க‍ளால் எத்த‍னையோ கடிதங்கள் எழுதப்படுகின்றன• அவற்றில் தனிப்பட்ட‍ முறையிலும்

பத்திரிகை வாயிலாகவும் எழுதப்படும் கடிதங் களும் அடங்கும். ஆனால்  1898ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளியான L’AURORE எனும் பத்திரிகையின் முன்பக்கத்திலே, “J’accuse…!” எனும் தலைப்பிலே (நான் குற்றம்சாட்டுகிறேன் )ஒருகடிதம் வெளியிடப்பட்டிருந்தது. அன்றை யகாலகட்டத்தில் முழுஉலகத்தையுமே திரும் பி ப்பார்க்கவைத்த கடிதம் அது. அப்போதைய ஜனாதிபதியாக இருந்த,  Félix Faureக்கு (பிரான்சின் 7 வது ஜனாதிபதி ) அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில்,  ஜனாதிபதி மீது பல குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.  

ஜனாதிபதிக்கு எதிராக கடிதம் எழுதுவது இக்காலத்தில் மிகவும் சாதார ணமான ஒன்று. ஆனால் அக்காலத்தில் அது மிகவும் துணிச்சல் மிக்க ஒன்றாக கருதப்பட்டது. இந்த துணிச்சலான கடிதத்தை எழுதியவர் Émile Zola. என்பவர். அவரது கடிதத்தின் சுருக்கம் வருமாறு,

‘ஜனாதிபதி அவர்களே, உங்கள் ஆட்சி சட்டவிரோதமானது, நீங் கள் சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் பலர் குற்றமேதும் செய்யாதவர்கள், முக் கியமாக இராணுவ தளபதி  Alfred Dreyfus ஐ சிறையில் அடைத்து வைத் திருக்கிறீர்கள். அவர் உளவு பார்த் ததாக குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் அதில் துளிகூட உண்மை கிடையாது. அவர் நேர்மையானவர். பிரான்சுக்காக பல அர்ப்பணிப்புக்களைச் செய்தவர். அவரை உடன்விடுவியுங்கள்’  என்று எழுதியிருந்தார்.   

இக்கடிதம் வெளியானதும்  ’ Émile Zola  வை கைது செய்ய வேண்டும்’ என் கிற கோரிக்கையை அரச ஆதரவாளர்கள் முன்வைத்தார்கள். 23.02.1898 அன்று ‘Émile Zola ஒரு குற்றவாளி’ என்று அரசு அறிவித்தது. எந்த வேளை யிலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை இருந்தது. எனவே கைதில் இருந்து தப்புவதற்காக அவர் பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென் றார்.  “J’accuse …!” என்கிற இந்தக் கடிதம், ஏனைய நாடுகளுக்கும் முன் மாதிரியாக இருந்தது. இதே தலைப்பில், ஏனைய நாட்டு ஜனாதிபதிகளு க்கும் கடிதங்கள் எழுதப்பட்டன. அடக்குமுறைகளுக்கு எதிரான வலிமை மிக்க ஒரு சொல்லாக ‘”J’accuse …!’ வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: