Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கே வெற்றி! – சொல்வது அதிமுக-வின் நமது எம்ஜிஆர்

அடுத்த தேர்தலில் தி.மு.க•வுக்கே வெற்றி! அ.தி.மு.க.வுக்கு தோல்வி தான்! – சொல்வது அதிமுக-வின் ‘நமது எம்ஜிஆர் நாளேடு’!

அடுத்த தேர்தலில் தி.மு.க•வுக்கே வெற்றி! அ.தி.மு.க.வுக்கு தோல்வி தான்! – சொல்வது நமது எம்ஜிஆர் நாளேடு!

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’. ஜெயலலிதாவின் அறிக்கைகள் மற்றும்

அ.தி.மு.க.வின் செய்திகளை தாங்கி வருகிறது நமது எம்.ஜி.ஆர். இதில் வரும் கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது.

இந்த பத்திரிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நிறைய விஷய ங்களை சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கருத்துக் கணிப்பு. 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும்? என்ற கேள்வி எழுப்பி அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, மற்றவை என மூன்று ஆப்ஷன்களை கொடுத்திருந்தார்கள். விருப்பமானவர்களுக்கு வாக்களிக்க முடியும். அதன்படி வாக்களித்தால் வெளியான ரிசல்ட்டில் தி.மு.க.வுக்கே ஆதரவு அதிகமாக இருந்தது. அ.தி.மு.க கூட்டணிக்கு 6.5 சதவீதமும், தி.மு.க. கூட்டணிக்கு 53.03 சதவீத ஆதரவும் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவு கள் சொன்னது. இது டிசம்பர் 15-ம் தேதி (இன்று) மாலை 5 மணி நிலவரம்.

இதில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. நாங்கள் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். தனித்தே தேர்தலை சந்திப்போம் என ஜெயலலிதா அடிக்கடி சொல்லி வருகிறார். ஆனால், இந்த ஆன்லைன் கருத்துக் கணிப் பில் அ.தி.மு.க கூட்டணி என தைரியமாக குறிப்பிட்டிருந்தார்கள். இது யார் பார்த்த வேலை என தெரியவில்லை. இதே இணையத்தளத்தில் ‘வாழ்த்துகள்’ என்கிற பகுதியில் ‘கே.ஏ.செங்கோட்டையன் – தலைமை நிலைய செயலாளர்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் அந்த பதவியில் இல்லை. இப்படி நிறைய பெயர்கள் அதில் வந்து போகிறது.

இந்நிலையில் இந்த கருத்து கணிப்பின் எதிரொலியோ என்னமோ இந்த இணையதளம் இன்று மாலை 5.30 மணியிலிருந்து திடீரென இயங்கவி ல்லை. ஆனால் சில நிமிடங்கள்தான். மீண்டும் இயங்க தொடங்கிய அந் த இணையதளத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பை காணவில்லை. அதற்குபதிலாக, ‘இணையதளத்தைப்பற்றி உங்கள் கருத் து என்ன?’ என மாற்றியிருக்கிறார்கள். ‘தி.மு.க ஜெயிக்கும்’ என்ற கருத்து கணிப்பு தூக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் டி.ஜி.பி விவகாரம் இப்போது தான் முடிந்திரு க்கிறது. அதற்குள் புதிய தலைவலி!

=> பரக்கத் அலி, விகடன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: