Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவபெருமானின் 5 மனைவிகளும்! காதல் கதைகளும்! – ஆன்மீகத் தகவல்

சிவபெருமானின் 5 மனைவிகளும்! காதல் கதைகளும்! – ஆன்மீகத் தகவல்

சிவபெருமானின் 5 மனைவிகளும்! காதல் கதைகளும்! – ஆன்மீகத் தகவல்

நம் அனைவருக்கும் பார்வதிதேவியைப்பற்றி தெரிந்தாலும்கூட சிவபெரு மானுக்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே

பெண்மை சக்தியின் சின்னங்கள். இந்த அனைத்து கடவுள்களும் நன்கு அறியப்பட்டவர்களே. இவர்களை நாம் அனைவரும் வணங்கி கொண்டு தான் இரு க்கிறோம். அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர்கள் தான் சக்தி, பார்வதி, உமா, துர்கா மற்றும் காளி.

இந்த ஒவ்வொரு கடவுளும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளனர்.

சக்தி ஆக்கச் சக்தியையும், காக்கும் சக்தியையும் குறிக்கும்

பார்வதி தேவி – காதலை குறிக்கும்

உமா – தாய்மையை குறிப்பவர்.

துர்கா – நியாயத்தை நிலைநாட்டுபவர்.

காளி – இறப்பை குறிக்கும் கடவுள். சரி, இவர்களின் காதல் கதைகளைப் பற்றி பார்க்கலாமா?

1. சிவபெருமானும் சக்தியும்

சரஸ்வதி தேவியை பிரம்ம தேவனும், லக்ஷ்மியை விஷ்ணு பகவானும் மணந்திருந்த போதிலும், சிவபெருமான் திருமணமாகாமலேயே இருந்தா ர். திருமணம் என்னும் உலகளாவிய பந்தத்தைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. வருடக்கணக்கில் தியானத்தில் ஈடுபட்டிருந்த அவர், யாரும் அவரை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டார். சிவ பெருமானின் நலனை கருதி, எப்படி அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைப்பது என்று விஷ்ணு பகவானிடம் கலந்துரையாடினார். இப்படியே அவரை விட்டு விட்டால், அவர் தனிமையில் தான் இருப்பார் என கவலைப்பட்டனர்.

சிவபெருமானுக்கு ஏற்ற பெண் யாரேனும் உண்டா என பிரம்மதேவனிடம் விஷ்ணு பகவான் கேட்டார். அதற்கு தன் மகனான தக்ஷாவிற்கு பிறந்த பெண்ணான சதியை பிரம்மதேவன் பரிந்துரைத்தார்.  சிறு வயதில் இருந் தே சிவபெருமானின் பக்தையாவார் சதி. அவருக்கு பணிவிடைசெய்யவு ம் அவரின் மனைவியாக வாழ்ந்திடவும் நினைத்தாள். தனக்கு பல இடங் களில் இருந்து வரன் வந்தாலும் கூட அவைகள் அனைத்தையும் நிராகரித் து சிவபெருமானை எண்ணி தவம் புரிய ஆரம்பித்தாள்.

தீவிர தவத்தில் இருந்த அவள், நாளடைவில் உணவு மற்றும் தண்ணீரை யும் கூட துறந்து, இலைகளை மட்டுமே உட்கொண்டு, பின் அதையும் கூட துறந்தார். கடைசியாக அவள் முன் சிவபெருமான் தோன்றினார். அவள் மனதில் இருந்ததை அறிந்த சிவபெருமான் அவளை பார்த்து புன்னகைத் தார். தன் கோரிக்கையை அவள் கூறுவதற்கு முன்பாகவே, சிவபெருமான் அவளை மணக்க முன் வந்தார்.

2. சிவபெருமானும் பார்வதிதேவியும்

பார்வதி என்றால் மலை என அர்த்தமாகும். சமஸ்கிருதத்தில் பார்வதி யை பர்வத் என கூறப்படுகிறது. இள வயது முதலேயே சிவபெருமான் மீது காதல் கொண்டார் பார்வதி தேவி. அவரின் காதலையும் அன்பையும் பெ றுவதற்காக, சிவபெருமான் தியானத்தில் ஈடுபட்டுள்ள குகைக்கு பார்வதி சென்று, அந்த இடத்தை சுத்தப்படுத்தி அலங்கரித்தார். பார்வதியின் அன்பு மற்றும் பக்திக்கு செவி சாய்க்காமல் அவர் அசையாமல் இருந்தார். அவரு க்காக பழங்களை கொண்டு வந்தார் பார்வதி. அப்படியும் அவர் தீவிர தி யானத்தில்தான் இருந்தார். பார்வதிதேவியின் கருமையான சருமத்தினா ல்தான் அவரை சிவபெருமான் தவிர்த்தார் என்றும் கதைகள் கூறுகிறது.

தேவியும் அவருடைய காதலையும் அன்பையும் வெல்லும் கடைசி முயற் சியாக, காட்டில் தவம்செய்ய பார்வதிதேவி முடிவுசெய்தார். உணவு மற் றும் ஆடை ஏதும் இல்லாமல் மிகவும் கடுமையான தவத்தில் அவர் ஈடு பட்டார். அவரின் தவத்தால் மனம் இளகிய பிரம்ம தேவன் பார்வதிதேவி க்கு ஒரு வரத்தை அளிக்க வாக்களித்தார். தான் மிகவும் அழகான பெண் ணாக மாற வேண்டும் என்ற வரத்தை அவர் கேட்டார். அவருக்கு வரத்தை அளித்த பிரம்மதேவன், அவரைமிகவும் அழகிய பெண்ணாக மாற்றினார். அழகிய மங்கையாக மாறிய அவர் மீண்டும் குகைக்குள் சென்றார். அவர் அழகில் மயங்கிய சிவபெருமான் அவர் மீது காதலில் விழுந்து, அவரை திருமணம் செய்து கொண்டார்.

3. சிவபெருமானும் உமாவும்

சதி இறந்தவுடன் மீண்டும் உமாவாக அவதரித்தார் என கூறப்படுகிறது. சதியின் மறைவினால் உடைந்துபோயிருந்தாராம் சிவபெருமான். சிவ பெருமானுடன் மீண்டும் வந்து சேர்வதற்காகவே உமா மீண்டும் அவதரித் தார். அவருக்கு சிவபெருமானை ஞாபகம் இருந்தாலும் சிவபெருமானுக் கு இல்லை. போன ஜென்மத்தில் அவர் யார் என்பதும், சிவபெருமானுடன் தனக்கு நடந்த திருமணத்தைப் பற்றியும் அவர் அறிந்திருந்தார். மீண்டும் சிவபெருமானின் மனைவியாக வேண்டும் என்ற விதியை பெற்றிரு ந்த அ வர், தடையை சந்தித்தார்; சிவபெருமான் தன் பாலியல் தன்மையை துறந் தார். அவர்களின் திருமணத்திற்கு பிறகு, குமரனை பெற்றெடுத்தார் உமா.

4. சிவபெருமானும் காளியும்

சிவபெருமான் மற்றும் காளி தேவிக்கு உள்ள சம்பந்தத்தை பற்றி இந்து மதம் பலவிதமான கதைகளைகூறுகிறது. இவர்களின் தொடர்பை பற்றிய சரியான அளவு இன்னும் வாக்குவாதத்தில்தான் உள்ளது. இதில் பலரும் காளியை சிவபெருமானின் மனைவியாக கூறுகின்றனர். மகாபாகவத புராணத்தில் இதை ஆதரிக்கும் விதமான கதைகளையும் காணலாம். இக் கதையில் காளியும் சதியும் ஒருவராகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மகாபாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைபோல், மிகச்சிறந்த கட வுளான காளிதேவிதான் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனை படைத்தார். பின் காளியை தன்மனைவியாக்கி கொள்ள அவர்களனைவருக்கும் ஒரு சோதனை வைக்கப்பட்டது. இந்தசோதனையில், அவர்கள்முன் காளிதே வி மிகவும் அகோரமாக காட்சியளிப்பார். அதை பார்த்த பிரம்மாவும் விஷ் ணுவும் பயந்து போய்விட்டனர். ஆனால் சிவபெருமானோ பயம்கொள்ளா மல் இருந்ததால், இந்த போட்டியில் வெற்றிபெற்று, தக்ஷாவின் மகளாக சதியாக காளி தேவி பிறக்கையில் அவரை மணந்தார் சிவபெருமான்.

5. சிவபெருமானும் துர்காவும்

வேதத்தில்உள்ள கடவுள்களில் முக்கியத்துவம்வாய்ந்தவர் சிவபெருமா ன். அதே போல் பெண் தெய்வங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர், சிவபெருமானின் மனைவியான துர்காவாகும். துர்கா என்பது தேவிஅல்ல து கடவுள்களின் தாய் (அனைத்து இறை சக்தியின் சின்னமாகும்) அவதார மாகும். சைவர்களை பொறுத்த வரை, துர்கா சிவனின் மனைவியாவார். துர்காவை பார்வதியாகவும், சதியாகவும் பலர் பார்க்கின்றனர்.
 
=> இது நாட்டுநடப்பு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: