Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமருடன் ஹனுமன் போர் புரிந்த அதிசய நிகழ்வு – அரியதோர் ஆன்மீக தகவல்

ஸ்ரீராமருடன் ஹனுமன் போர் புரிந்த அதிசய நிகழ்வு – அரியதோர் ஆன்மீக தகவல்

ஸ்ரீராமருடன் ஹனுமன் போர் புரிந்த அதிசய நிகழ்வு – அரியதோர் ஆன்மீக தகவல்

இராவண வதமெல்லாம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிவிட்டார். பட்டாபிஷேகமும் விமரிசையாக

நடைபெற்றது. மக்கள் குறையின்றி வாழவும், பருவமழை தவறாது பெய் யவும் அப்போதெல்லாம் அரசர்கள் அடிக்கடி யாகம் செய்வர். இராம பிரா னும் வசிஷ்டர், ஜனகர், விஸ்வா மித்திரர் போன்ற மகரிஷிகளை கொண் டு யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்து அதற்குரிய ஏற்பாடுகளுக்கு ஆணையிட்டார். யாகமும் அயோத்தி நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விமரிசையாக துவங்கியது.

அப்போது அது வழியே இராமனின் ஆளுகைக்கு உட்பட்ட தேசம் ஒன்றை ஆண்டு வந்த சகுந்தன் என்கிற அரசன் வந்தான். யாகம் ஒன்று மிகப் பெரிய ரிஷிகளை கொண்டு நடத்தப்பட்டு வருவதை பார்த்து, வியந்தவன் உள்ளே சென்று அவர்களிடம் ஆசி பெற தீர்மானித்தான். ஆனால், வேட் டையாடிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தமையால், அப்படியே யாகசாலை க்குள் செல்ல விருப்பமின்றி, வெளியே நின்றபடி உள்ள இருந்த ரிஷிக ளை பார்த்து “வசிஷ்டாதி ரிஷிகளுக்கு என் வணக்கங்கள்!” என்றான். இதை நாரதர் கவனித்துவிட்டார்.

இன்றைய கலகத்திற்கு கரு கிடைக்கவில்லையே என ஏங்கிக் கொண்டி ருந்தவருக்கு இது லட்டுபோல கிடைத்துவிட்டது. நேரே விஸ்வாமித்திர ரிடம் சென்று, “விஸ்வாமித்ர மகாமுனிவரே! இராமனின் ஆளுகைக்குட் பட்ட ஒரு நாட்டின் சிற்றரசன் சகுந்தன். அவன் இந்த யாகசாலை முன்பு நின்று, ‘வசிஷ்டாதி முனிவர் யாவருக்கும் என் வணக்கங்கள்’ என்று கூறி விட்டுப் போகிறான். வசிஷ்டரைப் போன்று தாங்களும் இராமருக்குக் குருதானே? தாங்களும்தானே முக்கியப் பொறுப்பேற்று இந்த யாகத்தை நடத்துகிறீர்கள்? தங்கள் பெயரையும் சொல்லிச் சகுந்தன் வணக்கத்தைத் தெரிவித்திருக்க வேண்டாமா? வேண்டுமென்றே விஷமத்தனமாகத் தங்க ளை இந்தச் சிற்றரசன் அவமானப்படுத்தியிருப்பது எனக்கு வேதனையா யிருக்கிறது” என்று சிண்டு முடிந்தார்.

அது கேட்ட விஸ்வாமித்திரர் கொந்தளித்தார். “என்ன ஆணவம் அவனுக் கு… அவனை இப்போதே…” என்று பல்லைக் கடித்தபடி சபிக்க எத்தனிக்க, நாரதர் குறுக் கிட்டு, “விஸ்வாமித்திரரே சற்றுபொறும். சகுந்தனை சபித்து விட்டு தங்கள் தவவலிமையை ஏன் குறைத்து க்கொள்ள வேண்டும்? பேசாமல் இராமனை அழைத் து சகுந்தனை தண்டிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடவேண்டியது தானே?” என்றார்.

“நீங்கள் சொல்வதும் சரி தான்” என்று நாரதரின் கருத்தை ஆமோதித்த விஸ்வாமித்திரர் இராமனை தன்னை வந்து சந்திக்கும்படி பணித்தார். இராமனும் விஸ்வாமித்திரரை வந்து சந்தித்தார். நடந்தவற்றை அவரிடம் விளக்கிய விஸ்வாமித்திரர், “உன் குருவை அவமதித்தவனுக்கு என்ன தண்டனை தரப்போகிறாய்?” என்று கேட்டார். ஏதோ ஒரு மிகப் பெரிய உண்மையை உலகிற்கு உணர்த்த வேண்டியே நாரதர் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்று ஸ்ரீராமனுக்கு தெரியாதா என்ன?

நீங்களே சொல்லுங்கள் குருவே. நீங்கள் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்ற தயாராக இருக் கிறேன்” என்றார். “இன்று மாலை சூரியன் மறைவதற்குள் சகுந்தனின் தலை என் காலடியில் கிடக்கவேண்டும்! என்கிறார். “உத்தரவு குருவே!” என்று கூறியபடி சகுந்தனை தேடி புறப்பட்டார் இராமர். நாரதர் அடுத்து உடனே சகுந்தனிடம் ஓடி ச்சென்று, “என்ன காரிய மப்பா செய்துவிட்டாய் நீ…. விஸ்வாமித்திரரருக்கும் சேர்த்து வணக்கம் கூறியிருக்கலாமே… இதோ உன் தலையை துண் டிக்க இராமனை பணித் திருக்கிறார். இராமன் உன்மீது போர் தொடுக்க கிளம்பி வந்துகொண்டிரு க்கிறார்”

“ஐயோ… இராமபிரானை எதிர்க்க என்னால் முடியுமா? பேசாமல் என் தலையை நீங்களே துண்டித்து இராமன் கைகளில் சேர்பித்திவிடுங்கள்…” என்று உடைவாளை நாரதர் கைகளில் கொடுத்தான். நாரதர் அவனது நிலை கண்டு கலங்கினார். “சற்று பொறப்பா… உன்மீது எந்த தவறும் இல் லை எனும்போது நீ ஏன் வீணாக உயிர்த்தியாகம் செய்யவேண்டும்? மேலு ம் நீ மாண்டுவிட்டால் உன் மனைவி, மக்களுக்கு, குடிகளுக்கு யார் இருக் கிறார்கள்…”

“அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க நீங்கள் தான் ஒரு உபாயம் சொல் லவேண்டும் பிரபு” என்று நாரதரிடம் கோரிக்கை விடுத்தான். நாரதர் யோசித்தாவரு, “உன் நாட்டின் எல்லையில் இருக்கும் கானகத்தில் உள்ள மலைப் பகுதியில் தான் அனுமனின் தாய் அஞ்சனா தேவி வசிக்கிறாள். அவளை சென்று அவரிடம் சரணடை. அவள் ஒருவளால் தான் உன்னை காப்பாற்ற முடியும்!” என்றார்.

சகுந்தனும், உடனே அஞ்சனா தேவி வசிக்கும் கானகத்திற்கு சென்று அவ ளை தேடுகிறான். நேரம் கடந்து சென்றுகொண்டிருந்தே தவிர, அஞ்சனா தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில், தீ மூட்டி “அஞ்சனா தேவி சரணம்!” என்று கூறியபடி அதில் குதித்து உயிர்த் தியாக செய்ய முயன்றான்.

அஞ்சனாதேவி அவன் முன் பிரத்யட்சமானாள். “குழந்தாய்….எதற்காக என்னை தேடிக்கொண்டிருந்தாய்? தற்போது உயிரையும் அதற்காக தியா கம் செய்ய துணிந்தாய்?” “தாயே… எனக்கு உயிர்பிச்சை கொடுங்கள். அது உங்களால்தான் முடியும்” “என்னவிபரம் என்று சொல்லப்பா…” “இல்லை தாயே… எனக்கு அடைக்கலம் கொடுப்பதாக முதலில் சொல்லுங்கள்… பிறகு சொல்கிறேன்” சகுந்தன் பிடிவாதமாக நிற்கவே, அஞ்சனா தேவி, “ உனக்கு அபயமளித்தேன். கவலைவேண்டாம்!” என்று வரமளித்தாள். இறுதியில் நடந்தது அனைத்தையும் விவரித்தான் சகுந்தன். இராமபிரான் சகுந்தனை தேடிக்கொண்டிருக்கும் விபரம் அறிந்தது, அஞ்சனா தேவி திடுக்கிட்டாள்.

இருப்பினும் கொடுத்த வாக்கின்படி சகுந்தனை காப்பது தன் கடமை என்பதால், அனுமனை தன் முன் வரும்படி நினைத்தாள். தாய் நினைத்த அடுத்த நொடி, அனுமன் அங்கே தோன்றினான். “ தாயே… என்னை அழைத்த காரணம் என்னவோ? தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்…” என்றார். அஞ்சனா தேவி அனைத்தையும் விவரித்து, “என் னிடம் சரண் புகுந்தவனை காப்பாற்றவேண்டியது உன்கடமை!” என்றுகூறி சகுந்தனை இராமனின் அஸ்திரத்திடமிருந்து காக்கும் பொறுப்பை அனும னிடம் ஒப்ப டைத்தாள்.

இக்கட்டானதொரு தனக்கு ஏற்பட்டதை எண்ணி வருந்தினான் அனுமன். இருப்பினும் தாய் சொல் லை காப்பாற்ற வேண்டியது தனயனின் கடமை யல்லவா? எனவே தனது தாய்க்காக, உயிரினும் மேலான தனது இராம னையே எதிர்க்க துணிந்தான். தனது வாலால் ஒரு பெரிய கோட்டைபோ ல எழுப்பி, அதனுன் சகுந்தனை ஒளிந்துகொள்ளுமாறு செய்து, அதன் மேல் தான் உட்கார்ந்துகொண்டார். சகுந்தனை தேடி அந்தப் பகுதிக்கு வந் த இராமன், அவனை கண்டுபிடிக்க இயலாமல், அஸ்திரங்களை ஜெபித்து சகுந்தனின் சிரத்தை கொய்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

ஆனால், அவர் செலுத்திய அஸ்திரங்கள் அனைத்தும் மீண்டும் அவர் காலடியிலேயே வந்து வீழ்ந்தன. சக்தி மிக்க இராம பாணம் கூட தோற்று விட்டது. இராமருக்கு ஒன்று மே புரியவில்லை. இராமபாணம் தோற்றதாக சரித் திரமேயில்லையே… என்ன காரணம் என்று புரியா மல் குழம்பித் தவித்தார். அது சமயம் அங்கே வந்த நாரதர், “இராமா, உன் அஸ்திர பிரயோகத்தை ஒரு கணம் நிறுத்தி, சற்று எதிர்பக்கம் உற்றுக் கவனி. காரண த்தை நீயே அறிவாய்” என்றார். இராமனும், அப்படியே செய்ய, எதிர்புறம் இருந்து “ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்” என்று இராம நாமம் ஒலிப்பது காதில் கேட்டது. இது அனுமனின் குரலாயிற்றே… அவன் ஒருவனால் தான் இத்தனை பக்தியுடனும் தீர்க்க்கத்துடனும் இராம நாமத்தை கூற முடியும்… என்று தீர்மானித்தார்.

“இராமா… நீ நினைப்பது சரிதான். அனுமன் அங்கே இராம நாமம் ஜபித்து கொண்டிருக்கிறான். உன்னைவிட உன் நாமத்திற்கு சக்தி அதிகம். உன் நாமத்தை அனுமன் இதயப்பூர்வமாக ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, அவனைமீறி அவன் காவல் காத்துக்கொண்டிருக்கும் சகுந்தனை உன்னா ல் ஒன்றும் செய்ய முடியாது! இராமபாணம் மட்டுமல்ல… பிரம்மாஸ்திரம் கூட இதன் முன் பலிக்காது!” என்றார். இதற்க்கிடியே சினம் தணிந்த விஸ் வாமித்திரர், தன்னால் ஒரு நிரபராதியின் உயிர் போய்விடக்கூடாதே என்று அங்கு ஓடி வந்தார்.

“இராமா நிறுத்து… நிறுத்து… சகுந்தனை ஒன்றும் செய்துவிடாதே” “குரு நாதா…மன்னிக்கவேண்டும். இராமன் வாக்கு தவறினான் என்று நாளை சரித்திரம் பேசக்கூடாதே… சகுந்தனின் தலையை சூரிய அஸ்தமனத்திற் குள் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என்று நான் அளித்த வாக்குறுதி என்னவாவது?” – இது இராமன்.

தான் போட்ட முடிச்சை தானே அவிழ்க்க விரும்பிய நார தர், சகுந்தனை வெளியே வரும்படி அழைத்து, விஸ்வா மித்திரரின் பாதங்களில் அவன் தலைபடும் படி வீழ்ந்து நமஸ்கரிக்கச் சொன்னார்! ஆக நாரத மகரிஷியின் சாது ரியத்தால் அனைவரின் வாக்கும் காப்பாற்றப்பட்டது. இராம நாமத்தின் பெருமையும் உலகிற்கு உணர்த்தப் பட்டது.

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே!
=> ராம்சுரத்குமார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: