புதிதாக குதிகால் (High Heels) செருப்பு அணிந்த பெண்கள் நடப்பதற்கு எளிய பயிற்சிகள்!
புதிதாக குதிகால் (High Heels) செருப்பு அணிந்த பெண்கள் நடப்பதற்கு எளிய பயிற்சிகள்!
குதிகால் (High Heels)செருப்பணியும் பெரும்பாலான பெண்களுக்கு கால் கள் பல விதமான பாதிப்புக்களால் பாதிக்கப்படுகிறது. மேலும் குதிகால் செருப்புக்களால் பாதிப்பு ஒருபுறம் என்றாலும்,
குதிகால்செருப்பணிந்து எப்படி நடக்கவேண்டும் என்று கூட தெரியாமல் ஏடாகூடமாக நடந்து கீழே விழுந்து அடி பட்டு, கட்டுப்போட்டு, வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் பெண்களும் அதிகம்தான்.
இந்த குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதி ரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்த மான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சிலபெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண் கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.
* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச்சமநிலைசெய்துவிட்டு நடந்து பழகவேண்டும்
*குதிகால்செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்கா மல் குறுகியஇடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.
* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படி யில் ஒன்று போல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.
*மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற் பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிற ங்க வேண்டும்.
*குதிகால்செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமை யாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.
*அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போ து குதிகால் வீக்க ம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறை யும்.
* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.
*கால்நீட்டி கீழேஉட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதி யில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறியகோலிகளை தரையில்போட்டு அவற்றை கால் பாதங்களின் முற் பகுதி விரல் இடுக்கில் அகப்படசெய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
=> கூடல் குருவம்மா