“அந்த” இழிபிறவியை, எதற்கு நீ மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
“அந்த” இழிபிறவியை, எதற்கு நீ மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
அன்புச் சகோதரிக்கு —
என் வயது, 45; பெற்றோருக்கு ஒரே பையன். உடன் பிறந்தோர் யாரும் இல்லை. கல்லூரியில் படிக்கும் போது, வெளியூரில் இருந்து எங்கள், ஊருக்கு படிக்க வந்த ஒரு பெண்ணை
விரும்பினேன். அவளும் எங்கள் இனம்தான். எங்கள் காதல் 3மாதம் தொ டர்ந்த நிலையில், விஷயம் என் தாயாருக்கு தெரிந்து, அவளுடன், சண்டைபோட்டு, அவளின் பெற்றோர் ஏழை கள் என்பதால், அவளை ஊரை விட்டு துரத்தினாள். இத ற்கு பின்பும், ‘பெற்றோர் சம்மதத்துடன்தான், திருமணம் செய்ய வேண்டும்…’ என்ற வைராக்கியத்தில் காத்திருந் தேன்.
ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பின், பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர் அவளின் பெற்றோர். நானும், என் பெற்றோருக்கு தெரியாமல் அவளை கோவிலில் மணம் புரிந்து, அதை பதிவும்செய்து, வீட்டிற்குவந்து விட்டேன்.
ஐந்து ஆண்டுகளுக்குபின், என் திருமணப்பேச்சை பெற்றோர் எடுத்தபோது, அவளைத்தான் மணமுடிப் பேன் என்று உறுதியாக நின்றதால், வேறு வழியின்றி சம்மதித்தனர். ஆனால், என் திருமண சந்தோஷம் மூன்று மாதங்கள்கூட நீடிக்கவில்லை. காரணம், என் தாயார் மனவியாதியால் பாதிக்கப்பட்டார். இதனால், என் மனைவி அவளின் சொந்த ஊருக்கே சென்று விட்டாள்.
அங்கு, இவளை விட, 15 வயது மூத்த மருத்துவரோடு சினேகம் ஏற்பட்டு, அவரோடு வாழ்ந்து வந்தாள். அந்நபருக்கு ஏற்கன வே குடும்பம் உள்ளது. 10 ஆண்டுகள் கழித்து, அந்த நபரின் மூலம் கருத்தரிக்கவே, என்னை முறைப் படி விவாகரத்து செய்தாள்; நானும் சம்மதித்தேன்.
இதற்கு நடுவில், என்மூலம் பிறந்தமகனும், அவளு டனே இருந்தான். இந்த மன உளைச்சல், வேதனை யில் தானோ என்னவோ, அவளால், எந்த வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 3 ஆண்டுகளில், 25 வீடுகள், மாற்றியுள்ளாள். இதனாலே யே நான்கு ஆண்டுகளுக்கு முன், அந்த மருத்துவர், இவள் பெயரில் சொந் த வீடு கட்டிக் கொடுத்தார்.
ஆனாலும் தெருவில் இவளுக்கும் மற்றவர்களுக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், நான்தான் தூண்டி விடுகிறேன் எனநினைத்து, தெருவில்உள்ளவர்களை எல்லாம் அசிங்கமாக, கொச்சையான வார்த்தைகளி ல் திட்டுகிறாள். இதற்கு மத்தியில்தான், ஒரு பாவமு ம் அறியாத என் மகனும், அவளது மகளும் வளர்கி ன் றனர். என் மகன், தற்போது, பிளஸ்2 பொது தேர்வு எழுதப் போகிறான்; பெண் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.
விவகாரத்துக்குப்பின் கூட, இன்றுவரை, மகனுக்காகவும், அவளுக்காகவு ம் பல லட்சங்கள் செலவு செய்துள்ளேன்.
என் மகனுக்காக, இன்று வரை மறுமணம் புரியாமல் தியாக வாழ்க்கை வாழ்கிறேன். இப்பிரச்னைகளுக்கு மத்தியில், செக்யூரிட்டியாக வந்தவனிடம் மனதைப் பறி கொடுத்துள்ளாள். அவனுக்கு வேறு ஒருத்தியுடன் திருமணம் என்றவுடன், குழந்தைகளை அம்போ என விட்டுவிட்டு, 10 நாட்கள் வீட்டைவிட்டு போய்விட்டா ள். அப்போதும்கூட, நான் தான் காப்பாற்றி, ‘குழந்தைகளுக்காக இருக்க வேண்டும்…’ என அறிவுரை கூறினேன்.
இப்போது என் கேள்விகள்…
1) திரும்ப இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளலா மா?
2) என் மகனை மட்டும் சட்டப்படி என்னிடம் அழைத்து க் கொள்ளலாமா?
3) வேறு திருமணம் புரியலாமா, என் மகனை, என்ன செய்வது?
— இப்படிக்கு, உங்கள் பதிலை எதிர்நோக்கும்
அன்புச் சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
உன் மனைவி ஒரு நிம்போமேனியாக்; ஆணின் எந்த தாம்பத்யத்திலும், திருப்தி அடையாத பெண்கள் இவர்கள். மலர் விட்டு, மலர்தாவும் வண்டுகள்போல, இவர்கள் வண்டு விட்டு வண்டு தாவும் மலர்கள். இவர்க ள் உடல் சுகத்துக்காக, குடும்ப கவுரவத்தை துற ந்து, பிள்ளைகளின் எதிர் காலத்தை நாசமாக்கி, தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி கொட்டிக் கொள்வர்கள்.
உன் முன்னாள் மனைவியின் துர்நடத்தையால், நீ, உன் மகன் மற்றும் மரு த்துவர் மகளும், கடுமையான மன அழுத்தத் திற்கு ஆளாகியுள்ளீர்கள்.
நீ மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தியாக உணர்வால் அல்ல, மீண்டும் சுடுமோ என்கிற பயத்தால்! ஆப்பை அசைத்து, வால் மாட்டிக் கொண்ட குரங்கின் கதை தான், உன்னுடைய கதை!
நீ கேட்டிருக்கும் மூன்று கேள்விகளுக்குமான பதில்கள்:
* அந்த இழிபிறவியை, எதற்கு நீ மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்? இன்னும் பல ஆண்களுடன் அவள் தொட ர்பு கொள்ள, நீ தொடர்பு பாலம் ஆக போகிறாயா… விவாகரத்து பெற்றது டன், அவளுக்கும், உனக்குமான உறவு முறிந்து விட்டது. அவளை சந்தித்து, எந்த அறி வுரையும் கூற முயற்சிக்காதே! அவள் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈர்ப்பையும் கத்தரித்து விடு.
* உன் மகன் யாரிடம் இருக்க விரும்புகிறானோ, அங் கேயே இருக்கட்டும். தாயாரின் துர்நடத்தையை காண சகிக்காது, உன்னி டமே வெகுசீக்கிரம் வந்து விடுவான்; அப்போது, ஆதரவு கரம் நீட்டு.
*இரண்டாம் திருமணம் உனக்குதேவையில்லாதது; அது, தோற்றுப்போகு ம் வாய்ப்பு உள்ளது. ஊரறிய உனக்காக ஒன்பது ஆண் டுகள் காத்திருந்த ஒரு பெண், காதலித்த கணவனை மூன்றே மாதங்களில் விட்டு போனது ஏன்? உன் முன் னாள் மனைவியின் துர்நடத்தைக்கு, நீயும் மறைமுக காரணமாய் இருக்கலாம். நீ தொடர்ந்து ஆன்மிகத்தி ல் ஈடுபடு; ஆன்மிகம் மனித பலவீனங்களை மூழ்கடி க்கும்.
உன் மகனை நீ ஒன்றும் செய்ய வேண்டாம்; அவன் சிறப்பாக படித்து, ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்வா ன்.
வண்டு விட்டு வண்டு தாவும் மலருக்கு, தகுந்த தண்டனை யை, இறைவ ன் பரிசளிப்பான்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வார மலர், தினமலர்