பீப் பாடல் சர்ச்சையில் சிக்கினார் சிவகார்த்தியேன்! – திக் திக் திகிலில் சிவகார்த்தியேன்
பீப் பாடல் சர்ச்சையில் சிக்கினார் சிவகார்த்தியேன்! – திக் திக் திகிலில் சிவகார்த்தியேன்
அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் கடந்த சில நாட்களாக அதீத எதிர்ப்புக்களையும், கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருவதுடன்,
சிம்பு அனிருத்மீது பல காவல்நிலையங்களில் புகார்கள் பதியப்பட்டு, அது நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு சிம்பு அனிருத் ஆகிய இருவரு க்கும் கடும் நெருக்கடியை கொடுத்து வருவது நீங்கள் அறிந்த செய்தியே!
தற்போது இந்த பீப் பாடலை விளையாட்டாக நினைத்து தனது நண்பர்க ளுக்கு பகிர்ந்தது நடிகர் சிவகார்த்தியேன்தானாம். அனிருத்தின் நெருக்க மான நட்புஎல்லையில் இருப்பதால், அவருக்குத்தான் இந்த பீப் பாடலை அனிருத் முதலில் பகிர்ந்து உள்ளாராம்.
இதனை நடிகர் சிவகார்த்தியேன், தனது சக நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த பாடலை பகிர்ந்துகொண்ட யாரோ ஒரு நண்பர் தான் இந்தபாடலை வலைதளத்தில் பதிவேற்றி விட்டிருக்கிறார். இத்த னை சர்ச்சைகளுக்கும் இதுதான் காரணமாம். இதுவரை இந்த எதிர்ப்பு பேரலையில் சிக்கித் தவித்துவரும் சிம்பு அனிருத் வரிசையில் தற்போது சிவகார்த்தியேனும் சிக்கித் தவித்து வருகிறாராம். இதனால் பல்வேறு இடங்களில் நடிகர் சிவகார்த்தியேனுக்கும் எதிர்ப்புகள் பலமாக கிளம்பி யிருக்கிறது.
வலைதளங்களிலும் வாட்ஸ் அப்பிலும் பரவிவரும் இச்செய்தி வெறும் வதந்தியா? அல்லது உண்மையா? என்பதுபோக போகத்தெரியும்.