Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புளியாரைக் கீரையையும் சிறுபருப்பையும் சேர்த்து சமைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால். . .

புளியாரைக் கீரையையும் சிறுபருப்பையும் சேர்த்து சமைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால். . .

புளியாரைக் கீரையையும் சிறுபருப்பையும் சேர்த்து சமைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால். . .

சமையலறையே மருத்துவ அறையாக பயன்படுத்த நாம் பழகிக்கொள்ள‍ வேண்டும். சமையலறையில் இருக்கும் உணவுக்கான ஒவ்வொரு மூலப் பொருட்களும் மிகுந்த

மருத்துவத்தை கொண்டுள்ள‍து. இதனை தவறாமல் நாம் பயன்படுத்தி உடல்நலம் பேணிக்காக்க‍ முயற்சிக்க வேண்டும். சமையலறை மூலிகை களால் எண்ண‍ற்ற‍ நோய்களை நம்மால் குணப்படுத்த‍ முடியும்.
உதாரணமாக ஒருவருக்கு அதிகளவில் உடல் சூடு வந்தால், அதனால் ஏற் படும் நோய்களான‌ முகப்பரு, தோல் நோய்கள் , தலை முடி உதிர்தல், வயிற்று உபாதைகள் மற்றும் வலி, உடல் எடை வேகமாக குறைதல் போன்றவைகள் ஏற்பட்டு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது. அதனால், அதிகமான உடல்சூட்டை தணித்து ஆரோக்கியத்தை பேணிக் காக்க, ஒரு எளிய வழியுண்டு.
இந்த புளியாரைக் கீரையை எடுத்து அதனுடன் சிறுபருப்பு சேர்த்து, வாண லியில் போட்டு நன்றாக அவித்து, மத்து கொண்டு கடைந்து வைத்துக் கொண்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைய ஆரம்பிக்கும். இதையே அடிக்கடி சாப்பிட்டுவந்தால் அதீத உடல்சூடு தணி ந்து ஆரோக்கியம் பெறுவர். மருத்துவரின் ஆலோசனையைப்பெற்று உட் கொள்ள‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: