Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு! – இது வரலாறுகளின் வரலாறு!

தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு! – இது வரலாறுகளின் வரலாறு!

தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு! – இது வரலாறுகளின் வரலாறு!

இந்த பாரினில் தமிழ் எழுத்துக்கள் பிறந்து, தவழ்ந்த வரலாற்றை

அறிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்ளுங்கள். இதோ அந்த வரலாறு….

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலி களை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும்.

இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப் பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆயுத எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.

உலகமாந்தன்முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் (படர்க் கை), (தன்னிலை), (முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந் தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயி ரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி, த்+அ கூடி ‘த’ வாகவும், ம்+இ கூடி ‘மி’ யாகவும், ழ்+உ கூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடை யெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழை த்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

=> சக்திவேல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: