“இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! – கவியரசர் கண்ணதாசன் சொன்னது!”
“இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! – கவியரசர் கண்ணதாசன் சொன்னது!”
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியிருந்ததாலும், ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஔவை பிராட்டி சொல்லிச் சென்றிரு ந்தாலும், பெரியார் உள்ளிட்ட
பல தலைவர்களின் அயராத முயற்சியாலும் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக மதங்கள் மறைந்து சாதிகள் சரிந்து கலப்புத் திருமணங்களும், ஜாதி மறுப்பு திருமணங்களும் தற்போது அரங்கேறி, சமூகத்தில் மிகப் பெரிய புரட்சிகளை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜாதி மறுப்புத்திருமணத்தை பற்றி கவியரசு கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? இதோ அவர் சொன்ன வரிகள்
“நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்றுவைத்ததிலே அர்த்தம் இருக்கிறது . பெண் போகிற இடத்தில் பழக்க வழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும். பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல. ஜாதி நெறிதான்.”
Oh…. Ho… appadiyaa….. , ithunaalaththaan jaathi maari kalyaanam pannina kolai seiraangala?… ivlo naal ithu theriyaamap pochche…