திருமணம் முடிக்க உதவும் மந்திரங்கள்!
திருமணம் முடிக்க உதவும் மந்திரங்கள்!
நமது இந்துமதத்தில் கடவுளை வழிபடவும், மக்களின் துயர் தீரவும் மந்தி ரங்கள் பல உண்டு. அவற்றில்
ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தங்கு தடை யின்றி நடைபெற வழிவகுக்கும் அற்புத மந்திரங்களை இங்கே காண்போம்.
ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க மந்திரம்
1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்விஷா ஜஹி.
2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.
3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி
பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்
வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விள க்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க் கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக் கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.
ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம
இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெறவேண்டும். திருமணம் விரைவில் நடைபெற இன்னொரு வித வழிபாட்டுமுறை உள் ளது. கன்னிப்பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்ல து துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக் கி ஒரு துண்டைப்பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள் ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
கஜலட்சுமிக்குஎன்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால்பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தரவேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழ க்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்து க்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.
நாமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:
இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்யபலம் ஏற்படு ம். திருமணமும் விரைவில் கைகூடும். இதேபோல கா லையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திருமணம் கைகூடும்.
துளஸீமே சிரப்பது
பலம் பங்கஜ தாரிணி
த்ரி செனமே பத்ம நயனா
ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
கிறாணம் சுகந்தா மேபாது
முகஞ்ச சுமுகீ மம
ஸகந்தென கல்ஹாரிணீ பாது
ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
புஷ்பதா மத்மயம் பாது
நாபிம் ஸெளபாக்ய தாயிணி
கடிதம் குண்டலனி பாது
ஊரு வாத வந்திதா
ஜெனனீ ஜானுனீ பாது
ஐஸ்கே சகல வந்திதம்
நாராயணப் ப்ரியே பாது
ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
ஸங்கடே விடிமே துர்கே
பயே வாதே மஹா ஹவே
ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
துளஸீ ஸர்வத ஸதா
இதீதம் பரமம் குஹ்யம்
துளஸ்யா கவசம் முதா
துளஸீ கானனே திஷ்டன்
ஆஸீ னோவா ஜபேத்யதி
ஸர்வவான் காமான் அவாப் னோத
விஷ்ணு சாயுஜ்ய முச்யதி
எனக்கூறி கற்பூரதீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ் வாறுநாள் தோ றும் பக்திப்பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம்கைகூடும்.
நல்ல வரன் அமைய மந்திரம்
அபிராமி அந்தாதி பதிகம்
அதிசயமான வடிவுடையாள் அரவிந்த மெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசய மானது அபசயமாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோவாமபாகத்தை வவ்வியதே
தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவ ள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.
அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மத னையே விழி யால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில் அமர்ந்தருளினாள்.
=> வாசுகி