Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டீன் ஏஜ் வயது ஆண் பெண், சாப்பிட வேண்டிய கலோரி (உணவு)கள்

டீன் ஏஜ் வயது ஆண் பெண், சாப்பிட வேண்டிய கலோரி (உணவு)கள்

டீன் ஏஜ் வயது ஆண் பெண், சாப்பிட வேண்டிய கலோரி (உணவு)கள்

இந்த டீன் ஏஜ் வயதில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரு க்கும் அதிகப்படியான ஆற்ற‍ல் அவர்களின் உடலுக்கு தேவைப்ப‍டுவதால், அதற்கேற்ப உணவு வகைகளை

கலோரிகள்அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள‍து . இதனைமுறையே பின்பற்றி வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியும், நல்ல‍ ஆரோக்கியத்தை யும் பெற்று வாழ வழிஉண்டு என்கிறார்கள் உணவு நிபுணர்கள்

(ஒரு நாளைக்கு 2440 கிலோ கலோரி முதல் 3020 கிலோ கலோரி வரை தேவை. புரதம் – 55.5 கிராம் முதல் 61.5 கிராம் வரை)

காலை
7 மணி: பால் / காபி / டீ / க்ரீன் டீ
8 மணி: இட்லி – 4 முதல் 5 / தோசை – 3 சட்னி,சாம்பார் / பூரி கிழங்கு – 4 முதல் 5
.
11 மணி: ஆப்பிள் 1 அல்லது ஸ்நாக்ஸ், பழங்கள்
மதியம் 1 மணி:

சாம்பார் சாதம், தயிர் சாதம், காய்கறிப் பொரியல், பச்சடி, கீரை. அசைவ விரும்பிகள் வாரத்துக்கு இரண் டு நாட்களுக்கு வேகவைத்த கோழி இறைச்சி அல்லது மீன் 100 கிராம்.

மாலை

4 மணி: பால், கிரீன் டீ, பழ சாலட், ஸ்நாக்ஸ் ஊற வைத்த நிலக் கடலை.

8 மணி: டிபன் (அ) மதியம் சாப்பிட்டது போன்ற உணவு.

10 மணி: ஒரு கப் பாலுடன் பழம்.
குறிப்பு:

ஆரோக்கியமாக இருக்கவேண்டிய கட்டம் இது. நிறைய ஆற்றல் தேவையாக இருக்கும். மதியம் காய்கறியைச் சேர்த்துக்கொள்ள முடியவில்லை எனில், இரவில் சாப் பிடலாம். உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் மினரல்கள் இந்தக் காய்கறி, பழங்களில் இருந்து நேரடி யாகக் கிடைத்துவிடும். இத்துடன் உங்களது குடும்ப மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்

=> வாசுகி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: