தினமும் காளான் சூப்பை பெண்கள் குடித்து வந்தால் . . .
தினமும் காளான் சூப்பை பெண்கள் குடித்து வந்தால் . . .
தமிழில் காளான், வழக்குமொழியில் நாய்க்குடை என்றும் ஆங்கிலத்தில் இதை மஷ்ரூம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த காளான் குப்பை மேட்டிலும் வளரும் சுகாதாரமான இடத்திலும்
வளரும் தன்மைகொண்டது. குப்பைமேட்டில் வளரும் காளானை ஒரு போதும் நாம் பயன்படுத்தக் கூடாது. நல்ல சுகாதாரமான இடத்தில்இயற்கையான முறை யில் வளரும் காளான்களே உடலுக்கு ஆரோக்கியத் தை தரவல்லது.
இந்த காளானில் சூப் வைத்து குடித்தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது ஆண் பெண் என்ற பேதங்கள் இன்றி யார்வேண்டுமானாலும் குடிக்கலா ம். குறிப்பாக பெண்கள் இந்த காளான் சூப் தினமும் குடித்து வந்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் உண் டாகும் மார்பக புற்றுநோய் முன்பே தடுக்கப்பட்டு ரத்தமும் சுத்தமடைகிறது. இதனால் வந்தபின் சிகிச்சை என்றில்லாமல் வரும்முன் காக்க (வராமல் தடுக்க) முடியும் என்கிறார்கள் சித்த மருத்து
வர்கள்.
காளான்சூப் நல்ல ஆரோக்கியமான திரவ உண வாக இருந்தாலும் தினமும் குடித்தால் உங்க உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பதை உங்களது மருத்துவரை அணுகி, விவரம் கேட்டு அறிந்து கொண்டு உட்கொள்ளவும்.