Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுட்ட‍ உடனே ஆளைக்கொல்லாமல் ஆண்டுக்கணக்கில் காத்திருந்து கொன்று பழிதீர்த்த‍ துப்பாக்கிக் குண்டு! – ஓர் உண்மைச் சம்பவம்

யதார்த்தமாக நடக்க‍ கூடிய பல சம்பவங்களில் சில ஆச்ச‍ரியப்படும் அளவுக்கு சில அதிரடி

ஆச்சரியங்களும் நிகழ்ந்துள்ள‍து. அப்ப‍டி ஒரு சம்பவத்தைத்தான் நாம் இங்கு காணவிருக்கிறோம். ஒரு துப்பாக்கி குண்டு அதுவும் பயன்படுத்த‍ப் பட்ட‍ குண்டு, பல வருடங்கள் காத்திருந்து பழி தீர்த்த‍ சம்பவதை காண லாம் வாருங்கள்

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன்காதலியுடனான உறவைமுறித்துக்கொண்டான் . அக்காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ள அவளுடைய சகோதரர் கடும்கோபமடைந்து சீக்லேண்டை த் தேடிக்கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ் டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அத்துப்பாக்கிக் குண்டு முகத்தை உரசிக்கொண்டு சென்று அங்கிரு ந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழி த்து அப்பெரிய மரத்தை வெட்டிவிட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டிவிட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சி களை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படி ச்செய்கையில் அம்மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அக்குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அக்குண்டு பழி தீர்த்துக் கொண் டதுபோல அல்லவா இருக்கிறது. இந்த சம்பவம் ரிப்ளி யின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

=>: என். கணேசன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: