பீப் பாடல் சர்ச்சை – நன்றி தெரிவித்த டி. ராஜேந்தர் – புதிய வீடியோ
பீப் பாடல் சர்ச்சை – நன்றி தெரிவித்த டி. ராஜேந்தர் – புதிய வீடியோ
கடந்த மாதம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல், இணையத்தில் வேகமாக பரவியது. அப்பாடலில் பீப் என்ற இடத்தில் மிகவும்
மோசமான வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாககூறி, இது பெண்களை இழிவு படுத்துவதாக சொல்லி பல்வேறு மகளிர் அமைப்புக்களும், சில கட்சிகளும், பொதுமக்களின் சிலர் கடுமையாக எதிர்த்தும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் தகவல் அறிக்கையும் பெறப் பட்டது.
இந்த சர்ச்சை காரணமாக சிம்பு தலை மறைவாக இருக்கிறார். மேலும் அவர் இப்பாடலை யாரோ திருடி இணையத்தில் வெ ளியிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் சிம்பு வின் தாய் திருமதி உஷா அவர்களும் உணர்ச்சி பொ ங்க தனது மகனுக்
காக கண்ணீர் மல்க, பேட்டி கொடுத்தார். டி. இராஜேந்தரும் அவ்வப்போது ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து வந்த அதேவே ளையில் நீதிமன்றதில் சிம்புவுக்கு முன்ஜாமின்கோரி நீதிமன் றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பும், அதற்கு டி. இராஜேந்தரின் பேட்டியும் கீழுள்ள வீடியோவில் காணலாம்.