Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்! – குறிப்புக்கள்

கண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்! – குறிப்புக்கள்

கண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்! – குறிப்புக்கள்

கண்களுக்கு மெருமளவு அழகூட்டுவது எதுவென்று கேட்டால், அது இமை தான் என்றால் அது மிகையாகாது.  சரி இந்த இமைகளை

எப்ப‍டி ஆரோக்கியமாக, கருமையாக, அடர்த் தியாக, சற்று நீளமாக, கவர் ச்சியாக, வைத்தி ருப்ப‍து எப்ப‍டி என்று இங்கு பார்ப்போம்.

கண் இமைகள் வளர சில டிப்ஸ்

1. தினமும் ஆமணக்கெண்ணெயை தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக் கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி கூட தடவலாம்.  இவ்வாறு தொடர்ந்து இர ண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப் படும்.

2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட் டமின் E எண் ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமெ ன்றால் வைட்டமின் E மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட்போல் செய்து தடவலாம். இத னால் கண்களி ல் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமு ம் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.

3.தினமும் இமைகளை சுத்தமான சீப்பால் சீவவேண்டும். அப்படி சீவும் சீப் பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சீப்பான து சிறிதாகவும் இருக் கலாம் அல்லது மஸ்காரா ப்ரஸ் வைத்தும் சீவலாம். அதிலும் ஏதேனும் ஒரு இயற்கை எண்ணெயில் நனைத்து சீவினா ல் நல்லது. கண் இமை களை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சீவ வேண்டும்.

4. ஆமணக்கெண்ணெய்/வைட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வாஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையைத் தரும். இரவில் படுக்கும் முன் கண் இமைகள் மீது வாஸ்லினைத் தடவி, காலையி ல் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவிவிட வேண்டும். அப்படி கழுவ மறந்து விட்டால் அன்று முழுவதும் பிசுபிசுப்புடன் இருக்கும்.

5. நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெற லாம். நம் உடலில்உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக்கூட தினமும் புரோட்டீ ன் உணவை உண்ண வேண்டும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

=>பிரியா (அழகு கலை நிபுணர்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: