Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க‌ காதல் திருமணத்தில் முடிந்தால், அதனால் ஏற்படும் எண்ண‍ற்ற‍ பலன்களில் சில இதோ உங்களுக்காக

உங்க‌ காதல், திருமணத்தில் முடிந்தால், அதனால் ஏற்படும் எண்ண‍ற்ற‍ பலன்களில் சில இதோ உங்களுக்காக. . .

உங்க‌ காதல், திருமணத்தில் முடிந்தால், அதனால் ஏற்படும் எண்ண‍ற்ற‍ பலன்களில் சில இதோ உங்களுக்காக. . .

வாழ்க்கைத்துணை என்பது இறுதி வரை நம்முடன் வரப்போகும் ஒரு உறவு. நம் துணை எப்படி

இருக்கவேண்டும் என்று நாம்தான் தீர்மானம் செய்யவேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயிக்க ப்பட்ட திருமணமும் நன்மை தரக் கூடியது தான். ஆனால் காதல் திருமணத்தில் உள்ள நன்மைகள் பற்றி அனுபவசாலிகள் இவ்வாறு கூறுகின்றனர்.

காதலிக்கும் போது ஒருவரின் இரசனை மற்றவ ருக்குத் தெரியும். என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று தெரிந்து கொ ள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தே வை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன்ன தாகவே ஒருவரைஒருவர்புரிந்துகொள்ளலாம்.

மேலும் மனதளவில் தெரிந்துகொண்டு, திரும ணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். இதனால் திருமண வாழ்க்கை ஈஸியாகஅமையும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணத்தில், நமக்குதுணை யாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது.

காதல்திருமணம் செய்தவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமண த்தைவிட மன மொத்து வாழ்வார்கள். இவர்களின் வாழ் வில் ரொமான்ஸ் அதிகம் இருக்கும். காதலில் ஜெயித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் அவர்களின் வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

காதல் திருமணம் செய்தவர்களுக்கு ஒருவருக்கொருவர் ஏதாவது தவறுகள் செய்தால்கூட அதனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைவரும். சின்னசின்ன பிரச்சனைகளுக்கு கூட சண்டை போடத் தோன்றாதாம். காதல் திரு மணம் என்றால் ஒரு வருக்கொருவர் அட்ஜஸ்ட் மென்ட் இருக்கும். நாம் நேசித்து பார்த்து தேர்ந் தெடுத்த வாழ்க்கைத்தானே என்ற உணர்வில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்வார் கள்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் எந்த ஒரு விசயத்திற்கும் பெற்றோ ரைச்சார்ந்தே இருக்கவேண்டும். ஆனால் காதல் திருமண த்தில் இவ்வாறு இல்லை. எந்த ஒரு செயலையும் நாமே தைரியமாக செய்யலாம் அதற்கான மன வலிமை ஏற்படு ம்.

காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்ப தோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உரு வாகும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் நெருங்கிய அல்லது தூரத்து சொந்தங்களிடையே தான் நடக்கும்.

=> உலகநாயகி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: