கருவிலேயே இறந்தவர், ஒரு குழந்தைக்கு தந்தையான அதிசய விநோத சம்பவம்! பரபரப்பு
கருவிலேயே இறந்தவர், ஒரு குழந்தைக்கு தந்தையான அதிசய விநோத சம்பவம்! பரபரப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கருவிலேயே இறந்து போன ஒருவரின்
விந்தணுமூலமாக மற்றொருவருக்குகுழந்தை பிறந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவரின் உதவியை நாடினர். இதையடுத்து செயற்கை கருவூட்டலுக் காக கணவனின் விந்தணுவை சேமித்து, மனைவிக்கு செலுத்தப்பட்டது.
இம்முயற்சியின் மூலம் அவர்களுக்கு ஆண் குழ ந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் ரத்தப் பிரிவை சோதித்தபோது, AB+வகையை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. பெற்றோர் இருவருமே A- ரத்தப் பிரிவை சேர் ந்தவர்கள் என்பதால் ஏதோகுளறுபடி ஏற்பட்டு விந்தணு மாறி விட்டதாக தம்பதியினர் எண்ணினர். இதையடுத்து அந்த மருத்துவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
எனினும் விசாரணைமுடிவில், இத்தம்பதிகளி ன் விந்தணுக்களுக்குள் எவ்வித குளறுபடியும் நிகழவில்லை எனத்தெரியவந்தது. இதையடு த்து, சமீபத்தில் அத்தந்தையிடம் மேற்கொண் டு பரிசோதனை செய்தபோது, ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதன்படி குழந்தையின் தந்தை கருவாக உருவானபோது இரட்டைய ராக உருவாகினர் எனவும், அதில் ஒருவர் கருவிலேயே அழிந்துவிட்ட
தா கவும் தெரியவந்தது. ஆனால், அந்த சிதைந்துபோன குழந் தையின் டி.என்.ஏ. இவரது உடலுடன் சேர்ந்துள்ளது.
அந்த டி.என்.ஏ. மூலமாகவே தற்போது குழந்தை பிறந்துள் ளது என்பது தெரியவந்துள்ளது. அதாவது கருவில் இறந்து போன தனது சகோதரனின் குழந்தைக்கு அவர் தந்தையா கியுள்ளார். கைமேரா (Chimera)என அறியப்படும் இப்பிரச் சனை மிகவும் அரிதாகவே மருத்துவ உலகில் நிகழ்ந்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படித்தது