கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு… – இன்ட்ராயூட்டரின் டெத் (Intrauterine Death)- ஓர் அலசல்
கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு… – இன்ட்ராயூட்டரின் டெத் (Intrauterine Death), ஓர் அலசல்
“சிலருக்கு ஒபிசிட்டி காரணமாக இப்படி நிகழலாம், சிலருக்கு மரபியல் காரணங்களால்
சர்க்கரை மற்றும் உப்பினளவு கூடலாம் அல்லது குறைய லாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ சர்க்கரைச் சத்தோ, உப்புச்சத்தோ இருந்து அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு.
கருவில் இருக்கும் குழந்தைக்கு பரவும்போது தான் குறை ப்பிரசவம், அல்லது கருப்பையில் குழந்தை இறந்துபோத ல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக இரத்தத்தில் இருக்கும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்வதை மருத்துவ மொழியில் இன்ட்ராயூட்டரின் குரோத்ரிடார் டேஷன் என்பார்கள்.
மேலும் துரதிருஷ்டவசமாக கருவிலேயே உப்பின் அளவு அதிகரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ராயூட்டரின் டெத் என்பர். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து செக் அப் செல்ல தயங்கக் கூடாது. வயிற்றில்இருக்கும் குழந்தையின் நலனுக்காக அம்மா எப்போதும், தான் சாப்பிடும் உணவுப் பொருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவிர் க்காமல் இருப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல