சிறுநீர் கழிக்கும் போது இரத்தமும் சேர்ந்து வெளியேறினால் . . .
சிறுநீர் கழிக்கும் போது இரத்தமும் சேர்ந்து வெளியேறினால் . . .
இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கிய உணவு என்பது மெல்ல அழிந்து வருகிறது. மேலும் ருசிக்காக மட்டுமே பல ரசாயனங்கள் சேர்த்த உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும்
சிறுநீர் வந்தால் அதை அடக்கிவைக்கும் பழக்கம் குறிப்பாக பெண்களிடம் உள்ளது. இது மிகவும் தவறானது சிறுநீர் வந்தால் அத னை அடக்கிவைக்காமல் அருகில்உள்ள கழிவறைக்கு சென்று அதனை உடனே வெளியேற்றி விடவேண்டும். தரமற்ற உணவுகளை சாப்பிடுவதாலும், சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்றாமல் அடக்கி வைத்துக் கொண்டு வீட்டில் வந்து மொத்தமாக சிறுநீர் கழிப்பதா லும் உங்கள சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி, அந்த கற்களால் உங்கள் சிறுநீரகம் காயமடைந்து நீங்கள் கழிக்கும் சிறுநீருடன் இரத்தமும் சேர்ந்து வெளியேறும்.
இச்சூழ்நிலையில் உடனடியாக இன்னும் சொல் லப்போனால் போர்க்கால நடவடிக்கை எடுத்து, மருத்துவரிடம் சென்று காண்பித்து முடிந்தளவு மருத்துவர்தரும் மருந்து மாத்திரை மற்றும் ஊசியால் சிறுநீரகத்தில் உண்டான கற்களை கரைக்க பாருங்கள். முற்றிய நிலையாக இருந் தால், மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சையை மேற்கொள் ளலாம்.