Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணம் செய்யலாமா? வேண்டாமா? – தம்பி, என்ன‍ப்பா பிரச்ச‍னை உனக்கு?

திருமணம் செய்யலாமா? வேண்டாமா? – தம்பி, என்ன‍ப்பா பிரச்ச‍னை உனக்கு?

திருமணம் செய்யலாமா? வேண்டாமா? – தம்பி, என்ன‍ப்பா பிரச்ச‍னை உனக்கு?

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 27 வயது ஆண்; சில மாதங்களுக்கு முன், என் அப்பா இறந்து விட் டார். அண்ணன், அக்காவிற்கு

திருமணமாகி விட்டது. தற்போது, அம்மாவின் ஆதரவோடு, வாழ்ந்து வரு கிறேன்.

என்னால், இதுவரைக்கும் எந்த பணிக்கும் செல்ல முடியவில்லை. அப்ப டி ஏதாவது வேலைக்குச் சென்றால், மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே செல்வேன்.

எனக்கு சிறு வயதில் இருந்தே, ஆஸ்துமா பிரச்ச‌னை உள்ளது; மருத்துவ செலவு செய்ய, வீட்டில் வசதி இல்லை.

நான், ஓரளவு நன்றாகப் படிக்க கூடியவன்; பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின், கல்லூரியில் சேர, பண வசதி இல்லாததால், வீட்டில் இருந்தேன்.

பின், ஓராண்டு கழித்து, கல்லூரியில் சேர்ந்தேன்; ஆனால், ஒரு பாடத்தி ல் கூட தேர்ச்சி பெற முடியவில்லை.

அதனால், கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில்இருந்தேன். என்னை, வேலை க்குப் போகச் சொல்லி, கட்டாயப்படுத்தினார் அப்பா. ‘எனக்கு உடல் நலம் சரியில்லை; மருத்துவம் பாருங்கள். பின் வேலைக்குப் போகிறேன்…’ என்றேன். ஆனால், ‘நீ சம்பாதித்து, அதில் மருத்துவம் பார்த்துக் கொள்…’ என்றார் அப்பா.

இப்படியே காலம் செல்ல, இதற்கிடையில், மூன்று பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக, ஒரு தலையாக காதலித்தேன்; ஆனால், எந்தப் பெண்ணும் என்னைக் காதலிக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மன நலம் பாதிக்கப்பட்டு, அரசு மன நல மருத்துவமனையில், 10 நாட்கள் சிகிச்சை பெற்றேன். பின், மருத்துவ க் கல்லூரி, மன நல பேராசிரியர் ஒருவரின் ஆலோசனையின்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.

தற்போது, அஞ்சல் வழியில், ஓவிய ஆசிரியர் பயிற்சிக்கு படித்து வரும் நான், தையல் மற்றும் ஓவியம் சம்பந்தமான வேலைகளை கற்றுக் கொள் ள, அவ்வேலை தெரிந்தவர்களிடம், உதவியாளராக சேர்ந்தேன். அவர்கள் எதுவும் கற்றுத் தராமல், ஒப்புக்கு என்னை வைத்துக் கொண்டனர். எனக்கும் திறமை போதாது என்று நினைக்கிறேன்.

இந்நிலையில், இரண்டு முறை, தற்கொலைக்கு முயன்றேன். பின், ஏன் இப்படி செய்தேன் என்று கவலைப்பட்டேன்.

தற்போது, என்னிடம் பேசுவோர் எல்லாம், ‘எப்போது திருமணம்?’ என்று கேட்கின்றனர். திருமணம் செய்யலாமா, வேண்டாமா என்று குழப்பமாக உள்ளது. என் பிரச்னையை ஆராய்ந்து, நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் வாழ, சரியான ஆலோசனையை கூறுங்கள்.

— தங்கள் உண்மையுள்ள
மகன்.

அன்பு மகனுக்கு —

நிரந்தர வருமானம் தரும், எந்த வேலையிலும் இல்லை; ஆஸ்துமா பிரச்சனையுடன், மன நலமில்லாமல், மருந்து சாப்பிட்டு வருகிறாய். இத்தனைக்கும் நடுவே, உனக்கு கல்யாண ஆசை வந்துள்ளது.

மனநலம் சரியில்லாத எத்தனையோ பேர், புகழ்பெற்ற ஓவியர்களாகவும் , உயிர்க் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட பலர், பல்வேறு துறைகளி ல் பல சாதனைகளையும் புரிந்துள்ளனர்.

மகனே. உன் பிரச்னைகளுக்கு நீயே முதல் காரணம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்பர். சம்பாதிக்காத உன்னை, ‘சம்பாதித்து வைத்தியம் பார் த்துக் கொள்…’ என்று, உன் தந்தை சொல்லத் தானே செய்வார். வேலை யில்லாமல், அழுது வடிந்த முகத்துடன் இருக்கும் உன்னை யார் தான் காதலிப்பர்?

ஆஸ்துமா மிகப்பெரிய வியாதி அல்ல, எனக்கு தெரிந்த, நூற்றுக்கணக் கான ஆண் – பெண்கள் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்தபடி, வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். அதனால், முதலில், ஏதாவது கிடைக்கும் வேலையில் சேர்ந்து, சுய காலில் நில். பின், விட்ட படிப்பை, தொலை தூரக் கல்வி மூலம் தொடர்ந்து படி. ஓவிய பயிற்சிக்கு பின், உன் ஓவி யத்தில் தனித்துவமும், புதுமையும் இருந்தால், இத்துறையில் நீ வெற்றி பெறலாம்.

அதற்கு முன், தினமும் காலையில் எழுந்ததும், கண்ணாடி முன் நின்று, ‘ என் உடலும், மனமும் நலமாய் உள்ளது; நல்ல பணியில் சேர்ந்து சம்பா திப்பேன். நிலையான வருமானத்தை உறுதி செய்த பின், திருமணம் செய் வேன். பொருளாதார ரீதியாய், தாய்க்கு பாரமாய் இருக்க மாட்டேன். பெண்கள் விரும்பும் அளவிற்கு சுய சுத்தம் பேணுவேன். அழுமுகத்தை தவிர்த்து, எப்போதும் புன்னகையுடன் இருப்பேன்…’ என சுயவசியம் செய்து கொள்.
அண்ணன் மற்றும் அக்கா குடும்பத்தினருடன் நல்லுறவு பேணு; அவர்கள் அறிவுரை கூறினால், உதாசீனப்படுத்தாமல் காது கொடுத்து கேள். மன நல மருத்துவரின் ஆலோசனை பெற்று, உட்கொள்ளும் மாத்திரைகளை, கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்து. சுயமுன்னேற்ற நூல்களையும், வாழ்க் கையில் வெற்றி பெற்றோரின் சுயசரிதைகளையும் வாசி. வாராவாரம் கோவிலுக்கு போ.

ஆக்கப்பூர்வமாக பேசும் நண்பர்களுடன் நட்பு கொள். மகனே… உன்னால் சாதிக்கவும், சகலத்திலும் வெற்றி பெறவும் முடியும்; நம்பு!

— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்

One Comment

Leave a Reply