Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான 'PETA' பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான PETA பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான PETA பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன் றம் இடைக் காலத்தடை விதித்திருக்கும் இந்த வேளையில்,

ஜல்லிக்கட்டு க்கு எதிராக வழக்கு தொடர்ந்த PETA என்ற அமைப்பு பற்றி நாம் தெரிந்து  கொள்வது அவசியம்.

யார் இந்த PETA?
 
PETAPeople for the Ethical Treatment of Animals என்று தன்னை அழைத் துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக் காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என  தன்னைப் பதிவுசெய்துகொண்டது. (எளி மையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதி யோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி… அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித் தது பீட்டா.
 
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால் கள் பீட்டாவிற்கு தெரு நாய்களைப்பற்றி வரத் துவங் கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா. அந்தச் சட்டத்தின்படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்நாயைத் தத்தெ டுக்கமுன்வராவிட்டால் பீட்டா அந்நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
 
இவ்வாறு 2015ம் ஆண்டு மட்டும் பீட்டா கொ லை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிறவிலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவுதெரியுமா? அதிர்ச்சி அடைய வேண்டாம்…35000.  ஆமாம் நண்பர்களே … முப்பத்தி ஐந்து ஆயிரம்!! இந்தக் கருணை நிறைந்த மகா கொலை காரர்கள்  நம்மிடம் வந்து சொல்கி றார்கள்…
 
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
 
கொம்பைப் பிடிக்கிறாய்!
 
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
 
அதனால் நீ மாட்டை, மிருக வதை செய்கிறாய்… எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
 
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பார்களே நம்மூரில்… பீட்டா செய்வது அது வே தான்!!
 
பீட்டா – மிருகவதை வியாபாரம்
 
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக்கொலை என்றபெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களயும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
 
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பண மும், இடமும்இல்லை என்பது மட்டும்தான் உண்மையான காரணமா?  இதற்கான பதிலில் தான் இருக் கிறது சூட்சுமம்!
 
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக் கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
 
எனவே வளர்ப்புப்பிராணிகளை விற்பனைசெய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப்பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வரு கின்றன.
 
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை. சரி. அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறுஆதரவற்ற விலங்குகளைக்காப்பா ற்றும் அமைப்புகள் இல் லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
 
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கி றது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முட க்குகிறது.
 
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்தமிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல் வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!
 
 சரி… நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?
 
பீட்டா – தோலிருக்க, சுளை முழுங்கும் ஆளு !
 
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சி தான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுக ளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத் திருப்பார்.
 
பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிரு க்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய் ந்து கொண்டிருக்கும்.
 
நம் வீட்டுப்பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திர த்தில் வைப்பார்கள். அது பாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக் கும்.
 
காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுக ளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
 
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர் கள் பால் கறப்பார்கள்.
 
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்ற லாம்.
 
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப் பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத் தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?
 
மூன்றரை இலட்சம் கோடிகள்!
 
சரி… இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
 
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண் டு ஜாலியாக இருக்கும்.அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத் துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
 
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வள ர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப் படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத்தேவையை தீர்த்துவிடும். ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப் படாத நாட்டுமாடுகள் தான்.
 
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறு ம் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப் படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
 
எனவேதான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறி வைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்க ளால் கலப்பின மாடுகளை  இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுக ளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
 
உலகின் மிகப்பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
 
அவர்கள்கண்ணை தமிழகத்தின் மூன்றரைஇலட்சம் கோடிகள் கொண் ட  பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கி றது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
 
அதனால்தான் அவர்கள் இந்த வீரவிளையா ட்டை மிருக வதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டு கிறார்கள் !

பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்…
 
(இது வாட்ஸ் அப்பில் வந்த தகவல் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: