ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி,மீண்டும் நடிகையாக … – வீடியோ
ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக … – வீடியோ
விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பாண்டியநாடு. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற
ஃபை ஃபை ஃபை கலாச்சி பை -என்ற பாடல் ஹிட்டானது. இந்த பாடலை நடிகை லட்சுமி மேனனுக்காக நடிகை ரம்யாநம்பீசன் பாடியு ள்ளார். அதன் பிறகு வந்த டமால் டுமீல் திரை ப்படத்தில் போகாதே போகாதே, என்ற பாட லும் சகாப்தம் திரைப்படத்தில் அடியே ரதியே என்ற பாடலும் சகலகலா வல்லவன் திரைப் படத்தில் ஹிட்டு சாங்கு மாமா என்ற பாடலும் ரசிகர்களிடையே ஏகோ
பி த்த வரவேற்பை பெற்றது.
ரம்யாநம்பீசன், ஒருநாள் ஒருகனவு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானஇவர் தொடர்ந்து ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். அதன்பிறகு என சிலபடங்களில் நடித்துவந்தவருக்கு விஜய சேது பதியுடன் நடித்த பீட்சா பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால்அந்த படத்திற்கு பிறகு விஜய சேதுபதிக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது என் றாலும் நடிகை ரம்யா நம்பீசனுக்கு அதனைத் தொடர்ந்து நடித்தசில திரைப்படங்களும் கை கொடுக்க வில்லை. இதனால்சிறந்த பின்னணி பாடகியாக வேண்டும் என்ற
நோக்கத்தோடு நடிகைகளுக்கு பின்னணி பாடல்க ளை பாடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.
நீண்ட இடைவேளைக்குபிறகு, சேதுபதி என்ற திரைப்படத் தில் மீண்டும் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகி றார் ரம்யா நம்பீசன். இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கு ம் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “என்னைப் பொறுத்த வரை விஜயசேதுபதி ராசியான ஹீரோ. அத னால் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்திருப் பது எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடு க்கிறது. அதோடு, பீட்சாவுக்குபிறகு எதிர்பார்த்தபடி எனக்கு படங்கள் கிடைக்காதபோதும் இந்த முறை அந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக, இப்போதே சில முக்கிய டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறேன். அதனால் சேதுபதிக்குபிறகு தமிழ் சினிமாவில் எனது மார்க்கெட் உயர்ந்து விடும்” என்கிறார் ரம்யா நம்பீசன்.