Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக்கூடாதவைகள் – எச்ச‍ரிக்கை அலசல்

உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக்கூடாதவைகள் – எச்ச‍ரிக்கை அலசல்

உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக் கூடாதவைகள் – எச்ச‍ரிக்கை அலசல்

தொடர்ச்சியாக அதிகநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அல்ல‍து அதிக நேரம்

கணிணியில் பணிபுரிபவர்களுக்கு கழுத்து வலி என்பது வேண்டாத விரு ந்தாளியாக உங்களை வந்தடையும். அச்சமயத்தில் அதாவது உங்களுக்கு கழுத்து வலி எடுக்கும்போது நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்களை இங்கு காண்போம்.

கழுத்து வலி இருப்போர் செய்யக் கூடாதவை

1)கணிணியையோ அல்ல‍து தொலைக்காட்சியையோ மிகவும் உயரத்தில் வைத்து பார்ப்ப‍தோ அல்ல‍து தாழ்வாக வைத்து பார்ப்ப‍தோ கூடாது. தொலைக்காட்சியை மிகவும் அருகில் இருந்து பார்க்க‍க்கூடாது. கணிணி திரைக் கும் உங்களுக்கும் சுமார் 30 செ.மீ.-க்கு குறைவான இடைவெளி விட்டு பணிபுரியக்கூடாது.

2)எக்காரணம்கொண்டும் சுளுக்கு எடுப்ப‍தோ மசாஜ் செய்யச்சொல்வதோ கூடாது. மீறி செய்வதால் நரம்பு பாதிப்போ அல்ல‍து சதைத் தெறிப்போ ஏற்பட்டு தொடர்ச்சியாக கடுமை யான‌ வலி ஏற்படுத்தி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

3) தொலைக்காட்சியை படுத்துக்கொண்டே பார்க்க‍ கூடாது. அதேபோல் படுத்துக்கொண்டே புத்த‍கம் படி க்கவும் கூடாது. கணிணியில் படுத்துக் கொண்டே பணிபுரியக்கூடாது.

4) உட்கார்ந்துக்கிட்டே உறங்குவதும் கூடாது.

5) தலையணை இல்லாமல் வெறும்தரையில் அல் ல‍து படுக்கையில் தலை வைத்து உறங்கக் கூடாது.

6) மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்  சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ள‍க் கூடாது.

அப்ப‍டியும் கழுத்து வலி போகவில்லையா? அப்ப‍டின்னா நீங்க தாமதிக் காமல் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற் கொள்வது சாலச்சிறந்தது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: