Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அவளை குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது

“அவளை குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது?”

“அவளை குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது?”

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது48; என் மனைவி வயது 36. எங்களுக்கு, 17 வயதில், ஒரு மகன் இருக்கிறான். நான் கடந்த, 18 ஆண்டுகளுக்கும் மேலாக,

அறக்கட்டளை ஒன்றில் பணி முடித்து, தற்போ து, 3 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரியில், அலுவலகப் பணியாளராக பணிபுரிறேன்.

நான், கவிதை, கட்டுரைகள் எழுதுவதுடன், மேடையிலும் நன்றாக பேசுவேன். நூறு பெண் களில் ஒருவள், அழகாக, குணமாக, அமைதி யாக, அறிவாகதெரிந்தால், அவளுடன் கனிவாகபேசி, நட்பை ஏற்படுத்தி க்கொள்வது என் வழக்கம். அவ்வாறு ஏற்பட்ட, ஆண், பெண் நண்பர்கள் இன்றுவரை எனக்கு துணை யாக இருக்கின்றனர்.

எனக்கு திருமணமான சமயம், ஒருநாள், எங்கள் தென் னந்தோப்பில், என் உறவுக்கார பெண்ணை, அவள் மாமியாருடன் பார்த்தேன். அப்போது, அவளுக்கு திரு மணமாகி, இருமாதங்கள் ஆகியிருந்தன. தற்போது, அவள் வயது33. தூரத்து உறவுமுறை என்றாலும், அப் பெண்ணை அன்றுதான் முதன்முதலாக பார்த் தேன். அன்றே என் மனதில் அவள் ஆழமாக பதிந்துவிட்டாள். அப்பெண்ணின் கணவன், எனக்கு மைத்துனன் உறவு முறை. அவர்கள் வீடு, எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளது. இதனால், இரு குடும்பமும் நெருக்கமானது. அவள், என்னை, அண்ணன் என்றே அழை ப்பாள்.

என் மைத்துனருக்கு திருமணமாகி, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத சூழ்நிலையில், அவர்கள் இருவரையும், எனக்கு தெரிந்த பெண் மருத்துவ ரிடம் அழைத்து சென்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். தற்போது, அப் பெண்ணுக்கு, 14 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த, 18 ஆண்டுகளாக அப்பெண்ணுக்கும், அவளின் குடு ம்பத்திற்கும், நிறைய உதவிகள் செய்து வந்தேன். நான் இல்லாமல், அவர்கள் வீட்டில், எந்த காரியமும் செய்ய மாட்டார்கள். அவள் கணவன் கட்டடம் சார்ந்த துறையில் பணிபுரிவதால், அடிக்கடி வெளியூர்களில் தங்குவார்; ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தான், ஊருக்கு வருவார்.

இந்நிலையில், என் அலுவலகப் பணி காரணமாக, வெளி யூரில் இரு நாட் கள் தங்க நேர்ந்தது. அப்போது அவளுக்கு போன் செய்து, என் மனதில் இருப்பதை எல்லாம் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அவள்மீது எனக்கிருக்கும் காதலை மட்டும் கூறமுடியாமல் தவி த்தேன். மறுநாள் இரவு, தெய்வத்தின் துணையோடு, என்காதலை, அவளி டம் கூறினேன். அவளும் என்னை, 14 ஆண்டுகளாக விரும்பி வந்ததாக கூறினாள். அதைக்கேட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில் லை. அதன் பின், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள நகரத்தில், மிகப்பெரிய மருத்துவ மனையில் பணி கிடைக்க ஏற்பாடு செய்தேன்; தற்சமயம், அவள் அம் மருத்துவமனை யில் பணிபுரிகிறாள்.

கடந்த, நான்கு ஆண்டுகளாக நானும், அவளும் கணவன் – மனைவியாக வாழ்ந்து வருகிறோம். இருவரும் பல ஊர்களுக்கு சென்று தங்கி உள்ளோ ம். சகோதரனாக, 10 ஆண்டுகள், நண்பனாக நான்கு ஆண்டுகள், கணவ னாக, நான்கு ஆண்டுகள் என, 18 ஆண்டுகளில், நான் பெரும் புண்ணியத் தை அடைந்து விட்டேன். இந்நிலையில், இரு மாதத்திற்கு முன், ஒருநாள், அவளை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, நீண்டநேரம் போனை எடுக்காமல் இருந்தாள். பலமுறை முய ற்சி செய்தும், என்னுடன் பேசுவதை தவிர்த்தாள்.

கடந்த ஒரு மாதமாக, அவளுக்கு போன் செய்யும் போதெல்லாம் நீண்டநேரம், யாருடனோ பேசுவது தெரியவந்தது. ‘யார்?’ என்றுகேட்டபோது, ‘ மருத் துவமனையில் உள்ள பெண்கள்…’ என்று கூறினாள். ஒருநாள், ‘உண்மை யைசொல்…’ என் றேன். ‘நான் ஒருத்தரை ஆறு மாசமா காதலிக்கிறேன்; நாங்க ரெண்டு பேரும் புதுச்சேரியில் ஒரு ஓட்டலில் தங்கினோம். என்னை மன்னிச்சுடுங்க; இனிமே, உங்கள, கணவனாக என்னால் ஏற்க முடியாது. உங்கள அண்ணனாக, நண்பனாக தான் பார்க்கிறேன். என்னை மறந்துடுங்க. இந்த உண்மையைக் கூட, உங்களோடு, நாலு வருஷம் வா ழ்ந்ததால் தான் கூறுறேன். வேறு யாரிடமும் இதைச் சொல்லிடாதீங்க…’ என்றாள்.

அம்மா… அவள் என்னோடு இல்லாத வாழ்க்கை யை நினைத்து நினைத்து அழுது, எந்த முடிவும் எடுக்க முடியாமல், நடைபிணமாகவாழ்கிறேன். அவள் புதிய வாழ்க்கையை அனுபவித்து, நிம்ம தியாக இருக்கிறாள். நான் பழைய வாழ்க்கை யை தேடி, நிம்மதியை இழக்கிறேன். எனக்கு தக்க ஆலோசனை கூறவும்.

— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்புள்ள மகனுக்கு —

இருபது ஆண்டுகள் மனைவியுடன் குடும்பம் நடத்தி, 17 வயது மகனுக்கு தந்தை நீ. நல்ல பணியில், கைநிறைய சம்பாதிக்கவும் செய்கிறாய். இப்ப டி, திருப்திகரமான வாழ்க்கை அமைந்தும், கள்ளக்காதலிக்காக உருகுகி றாய்.

திருமணமான பெண்ணுக்கு சகோதரனாய், நண்பனாய் இருந்துபின், கள்ளக்காதலனான நீ எப்படி, உன் கள்ளக்காதலிக்கு கணவனாக முடியும் ?

கணவன் ஸ்தானம் உன்னதமானது; கள்ளக்காதலன் ஸ்தானம் அசுத்தமானது. குடிநீரையும், கழிவுநீரையும் ஒன்று சேர்க்க முயலாதே!

நீ, உன்மனைவிக்கும், அவள், அவளின் கணவனுக்கும் நம் பிக்கை துரோகம் செய்து, கள்ளக்காதலில் ஈடுபட்டீர்கள். இப்போது,அவளுக்கு பழைய கள்ளக்காதலன் புளித்துப் போனதால், புதிய கள்ளக்காதலில் ஈடுபடுகிறாள். அவளை குறைகூற உனக்கு என்ன அரு கதை இருக்கிறது?

இருவரும் கூட்டாய் சேர்ந்து திருடுனீர்கள். உன் கூட்டாளி, புதிய கூட்டா ளியுடன் சேர்ந்து, திருட ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு கள்ளக்காதலில் ருசி காண்பித்ததே நீதான். நல்ல பால்திரிந்துவிட, நீயே காரணம். மேடை பேச்சாளன், கவிஞன், பெண்களை மயக்கி தோழி ஆக்கும் மந்திரம் தெரிந் தவன் என தற்பெருமை பேசும் நீ, தங்கை முறை கொண்ட பெண்ணை, ஆசை நாயகியாய் பாவித்திருக்கிறாய். மீண்டும் அவள் உன்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட யோசனையும் கேட்பாய் போல!

தெய்வத்தின் துணையோடு உன் காதலை அவளிடம் கூறியதாக சொல்லி யிருக்கிறாய்… தங்கள் வாழ்க்கை துணைக்கு நம்பிக் கை துரோகம் இழை க்கும் கள்ளக்காதலர்களுக்கு எந்த தெய்வம் துணை நிற்கும்? திருடுபவன், கொலை செய் பவன் கூட சாமி கும்பிட்டு விட்டுதான் அவைகளில் ஈடுபடுகிறான். குற்றம் செய்பவர்கள், குற்ற செயல்களி ல் கடவுளையும், பங்கு தாரராக ஆக்குகின்றனர். நீயும் அப்படித்தான் சொல்கிறாய்.

பணம், பொருள், வேலைவாய்ப்பு என, அவளுக்கு நீ செ ய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாய்தான், அவள் உன்னுடன் கள்ளக்காத லில் ஈடுபட்டாள். இப்போது, அவள் வேலை பார்க்கும் இடத்தில் நிறைய ஆண் நண்பர்கள் கிடைத்திருப்பர். அவர்களில் ஒருவரை, தன் இரண்டா வது கள்ளக்காதலனாக வரித்திருக்கிறாள். இதில் நீ கவலைப்பட என்ன இருக்கு?

மனைவிக்கு பிற ஆண் செய்யும் உதவிகளை, லஜ்ஜையின்றி ஏற்றுக் கொ ள்ளும் அவள் கணவனிடமும் பல குறைகள் உள்ளன. மனைவியுடன், இன் னொரு ஆண் கைபேசிமூலம்பேச, இணைப்பு பாலமாகவும், மனைவியி ன் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு, ஆண்மை இல்லாதவனாகவு ம் அவள்கணவன் இருக்கலாம். அவனதுபலவீனங்களை, அவள் பயன்படு த்திக் கொண்டாள். கள்ளக்காதலிக்காக இவ்வளவு உருகு கிறாயே…

உன்னைப் போல் உன் மனைவியும் கள்ளக்காதலில் ஈடு பட்டால் தாங்கிக்கொள்வாயா? வெளி மைதானங்களில் விளையாடியது போதும்; ‘ஹோம் கிரவுண்டு’க்கு திரும் பு. உன் காம தகனத்தை உன் மனைவிமூலம் மட்டும் செய். கள்ளக் காதலி யின் நினைப்பை பிடுங்கிஎறி. மனைவிதவிர பிறபெண்களுடன் நெருங்கி பழகாதே!

உள்நோக்கம் கொண்ட உதவிகள் செய்வதுடன், பிறரை குற்றம் சாட்டுவ தற்கு முன், உன் முதுகிலுள்ள அழுக்கை அகற்றப் பார். ப்ளஸ் 2 படிக்கும் மகனின் எதிர்காலத்தை பிரகாசமாக்க முழு முயற்சி யில் ஈடுபடு. தவறான வழியில் கிடைத்த சந்தோஷம், கிடைக்காமல்போனதற்கு அழுது புலம்பாதே! இனி மேலாவது, உன் மனைவிக்கு நல்ல கணவனாகவும், மகனுக்கு நல்ல தந்தையாகவும் வாழப்பார். செய்த தவறுக்கு, இறைவனிடம் மன் னிப்பு கேட்டு இறைஞ்சு. திருந்தியவனுக்கு, நிச்ச யம் மன்னிப்பு கிட்டும்!

— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்

Leave a Reply