சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய வரலட்சுமி… – வரலட்சுமி பாராட்டிய பாலா!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய வரலட்சுமி… – வரலட்சுமி பாராட்டிய பாலா!
பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படங்களில், இயக்குநர் பாலா இயக்கத் தில், நடிகர் சசிகுமார் நடித்து வெளிவந்த
“தாரைதப்பட்டை”படம்.இது இளையராஜாவி ன் 1000வது திரைப்படமும்கூட என்பது மேலு ம் சிறப்புக்குரியது ஆகும். இத்திரைப்படம் வசூல் ரீதியில் இரண்டாவது இடத்தில் பிடித் ததுவிட்டது என்றாலும் பெருவாரியான ரசிக ர்களின் எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்வதாக அமையவில்லை. மேலும் இத்திரைப்படத்திற் கு கடும்விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருந்த போதிலும் இத்திரைப்படத்தில் கதாநாயகி யாக நடித்த இல்லை இல்லை ஒரு கரகாட்ட க் கலைஞராக வாழ்ந்து காட்டிய நடிகை வர லட்சுமியின் நடிப்பு அனைவரது பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டு போனது.
திரையுலகை சார்ந்தவர்கள் பலரும் வரலட்சுமி தொடர்புகொண்டு , பாரா
ட்டி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ரஜினிகா ந்தும் வரலட்சுமியைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து வர லட்சுமி, “ஓ மை காட், நான் இப்போது மிகமிக மகிழ்ச்சி யில் திளைத்திருக்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற் போதுதான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். உங் களது பாராட்டுக்களுக்கு நன்றிசார். மிகவும் அற்புத
மாக உணர்கிறேன்,” எனத்தெரிவித்து ள்ளார்.
இத்திரைப்படத்தில் நடித்த நடிகை வரலட்சுமியி டம் இயக்குநர் பாலா அவர்களைப் பற்றி ஒரு செய்தியாளர் கேட்டதற்கு அவர் ‘நான் அவரிடம் இந்த கதாபாத்திரத்திற்காக ஏதும்பயிற்சி எடுக்க வேண்டுமா? என்று கேட்டேன், அவர் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், படப்பிடிப்பிற்கு வா, நான் சொல்வதைசெய்” என்பார். படப்பிடிப்பில் இருந்த ஒரு வருடமும் ஸ்பாட்டில் நான் கண்ணாடியே பார்க்கல. ரெடியாகி பாலா சார் முன்னா ல போய் நிற்போம் அவர் தான் முடியைக்கலைச்சு விடு வார், மேக்அப் சரி பண்ணுவார், தேவைப்பட்டா துணி யை கூட கிழித்து விடு வார்’ என கூறினார்.